X
தமிழ் » திரைப்படங்கள் » கொலைகாரன்
கொலைகாரன்

கொலைகாரன்

Action | Thriller | 07 Jun 2019 | U/A | 110 Mins
Tamil

2.6 /5 Users

3.5 /5 Filmibeat

கொலைகாரன் கதை

கொலைகாரன் இயக்குனர் ஆண்ட்ரவ் லூயிஸ் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, ஆஷிமா, மற்றும் அர்ஜுன் நடிக்கும் அதிரடி த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பிரதீப் தயாரிக்க, இசையமைப்பாளர் சைமன் கே கிங் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் கெவின் ஒளிப்பதிவில், திரைப்பட தொகுப்பாளர் சதீஷ் சூர்யா எடிட்டிங் செய்துள்ளார். கதை  சென்னையில் உள்ள ஒரு அபார்ட்மென்டில் தனியாக வாழ்ந்து வருகிறார் விஜய் ஆன்டனி. இவரின் எதிர் வீட்டில் இப்படத்தின் நாயகி ஆஷ்மா தனது தாய் சீதா-வுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் உள்ள ஒரு பாலத்தின் கீழ் ஒருவர் உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு கொலைசெய்யப்பட்டிருக்கிறார். இக்கொலையினை கண்டுபிடிக்க துப்பறியும் காவல் துறை அதிகாரி, துணை போலீஸ் கமிஷனரான அர்ஜுன் வழக்கை விசாரிக்க தொடங்குகிறார். கொலை செய்யப்பட்ட நபருக்கும் நாயகி ஆஷ்மா-ற்கும் சம்பந்தம் இருப்பதாய் கண்டறிகிறார் அர்ஜுன். ஆனால் ஒரு பெண் இவ்வளவு கொடூரமாக கொலை செய்வதற்கு முடியாது என யூகிக்கும் அர்ஜுன், இவரின் பார்வை எதிர் வீட்டில் இருக்கும் விஜய் ஆன்டனி மேல் பாய்கிறது. எதிர்பாராத விதமாக விஜய் ஆன்டனி காவல் நிலையத்தில் நான்தான் கொலை செய்தேன் என சரண்டர் ஆகிறார். இருப்பினும் அர்ஜுன், இவர் கூறும் காரணங்களை நம்பாமல் கொலையாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். விசாரணை செய்யும் அர்ஜூனுக்கு சில திடுக்கிடும் தடயங்கள் கிடைக்கின்றன. அந்த தடயங்கள் என்ன? கொலை செய்தது யார்? இதில் விஜய் ஆன்டனி, அர்ஜுன் என இவ்விருவருக்குமே நடக்கின்ற சதுரங்க ஆட்டமே இப்படத்தின் திரில்லரான திரைக்கதை. விளம்பரம்  இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது இத்திரைப்படத்தின் பூஜை மற்றும் முதல் கட்ட அறிவுப்புகளுடன் 2018 ஜூன் 5ல் வெளியானது. பின்னர் 2018 டிசம்பரில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்தன. மேலும் இப்படத்தின் உள்ள ஒரு காட்சியினை டீஸராக வெளியிட்டு ஒரு புதிய ட்ரெண்டினை உருவாக்கியுள்ளது படக்குழு.
Read More

கொலைகாரன் நடிகர்கள் & படக்குழுவினர்

கொலைகாரன் அணியின் தகவல்

இயக்குனர் ஆண்ட்ரவ் லூயிஸ்
ஒளிப்பதிவாளர் முகேஷ்
தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்
இசை சைமன் கே கிங்
தயாரிப்பாளர் பிரதீப்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கொலைகாரன் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ராட்சசன், இமைக்கா நொடிகள் வரிசையில் மற்றொரு சூப்பர் க்ரைம் திரில்லர் படமாக வந்திருக்கிறது கொலைகாரன். கொலைகாரன் யார் என்பதை கடைசி வரை ரசிகர்கள் யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரு லுயிஸ். சின்ன சின்ன விஷயங்களையும் கவனமாக கையாண்டிருக்கிறார். குறிப்பாக கதாபாத்திரங்களின் பெயர்களில் கூட அதிக அக்கறை காட்டியிருக்கிறார். படத்தில் நாயகன் விஜய் ஆண்டனியின் பெயர் பிரபாகரன். போலீஸ் அதிகாரி அர்ஜுனின் பெயர் கார்த்திகேயன். இந்தப் பெயர் குறியீட்டைப் புரிந்து கொண்டால் படத்தை இன்னும் சுவாரஸ்யமாக பார்க்கலாம். படத்தின் முதல்பாதியில் என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை. எல்லாமே மர்ம முடிச்சுகளாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது, நம்மை சுவாரஸ்யம் பற்றிக்கொள்கிறது. ஆனால் எல்லாத்துக்கும் காரணம் சொல்லியிருப்பது படத்தின் நீளத்தை அதிகப்படுத்துகிறது. அதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். அதோடு, சில இடங்களில் லாஜிக் ஓட்டைகளும் இருப்பது உறுத்துகிறது. இது என்னுடைய ஏரியா என கெத்து காட்டுகிறார் விஜய் ஆண்டனி. நான், சலீம், பிச்சைக்காரன் படங்களை போல அமைதியாக ஸ்கோர் செய்கிறார். பார்வையாலேயே உணர்வுகளை கடத்தி லைக்ஸ் வாங்குகிறார். முந்தைய படங்களின் தோல்விகளை நிச்சயமாக ஈடுகட்டுவான் இந்த கொலைகாரன்.

கொலைகாரன் பாடல்கள்

கொலைகாரன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

கொலைகாரன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+