லக்ஷ்மி கதை

    லக்ஷ்மி தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில், பிரபுதேவா, தித்யா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் நடனத்தினை பற்றிய படம். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். 

    கதை :

    வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரியும் சிங்கிள் மதர் நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்). அவரது ஒரே மகள் லக்ஷ்மிக்கு (தித்யா), நாடி நரம்பெல்லாம் நடன வெறி. ஆனால் தாய்க்கோ நடனம் என்றாலே சுத்தமாக ஆகாது. இந்த நிலையில், சேனல் 99 நடத்தும் 'பிரைட் ஆஃப் இந்தியா' டான்ஸ் போட்டிக்கான அறிவிப்பை டி.வி.யில் பார்க்கும் லக்ஷ்மிக்கு அதில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால் தாயை மீறி எப்படி கலந்துகொள்வது என யோசித்துக்கொண்டிருக்கும் போது, ஓட்டல் ஓனர் விஜய கிருஷ்ணாவின் (பிரபுதேவா) உதவி கிடைக்கிறது. இதையடுத்து நடனப் போட்டியில் கலந்துகொள்ளும் லக்ஷ்மியின் கனவு நனவானதா, பிரபுதேவாவுக்கும் லக்ஷ்மிக்குமான உறவு என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது மீதிக்கதை
    **Note:Hey! Would you like to share the story of the movie லக்ஷ்மி with us? Please send it to us (popcorn@oneindia.co.in).