X
லக்ஷ்மி

லக்ஷ்மி

Drama | 24 Aug 2018 | U |
Tamil

2.8 /5 Users

2.5 /5 Filmibeat

லக்ஷ்மி கதை

லக்ஷ்மி தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில், பிரபுதேவா, தித்யா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் நடனத்தினை பற்றிய படம். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.  கதை : வங்கி ஒன்றில் அதிகாரியாக பணிபுரியும் சிங்கிள் மதர் நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்). அவரது ஒரே மகள் லக்ஷ்மிக்கு (தித்யா), நாடி நரம்பெல்லாம் நடன வெறி. ஆனால் தாய்க்கோ நடனம் என்றாலே சுத்தமாக ஆகாது. இந்த நிலையில், சேனல் 99 நடத்தும் 'பிரைட் ஆஃப் இந்தியா' டான்ஸ் போட்டிக்கான அறிவிப்பை டி.வி.யில் பார்க்கும் லக்ஷ்மிக்கு அதில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. ஆனால் தாயை மீறி எப்படி கலந்துகொள்வது என யோசித்துக்கொண்டிருக்கும் போது, ஓட்டல் ஓனர் விஜய கிருஷ்ணாவின் (பிரபுதேவா) உதவி கிடைக்கிறது. இதையடுத்து நடனப் போட்டியில் கலந்துகொள்ளும் லக்ஷ்மியின் கனவு நனவானதா, பிரபுதேவாவுக்கும் லக்ஷ்மிக்குமான உறவு என்ன என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடை தேடி பயணிக்கிறது மீதிக்கதை
Read More

லக்ஷ்மி நடிகர்கள் & படக்குழுவினர்

லக்ஷ்மி அணியின் தகவல்

இயக்குனர் ஏ எல் விஜய்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சாம் சி எஸ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

லக்ஷ்மி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஒரு டான்ஸ் ரியாலிட்டி ஷோவை இரண்டரை மணி நேர படமாக தந்திருக்கிறார் இயக்குனர் விஜய். இந்தியா முழுவதும் இருந்து எக்கச்சக்க திறமையான டான்ஸ் குழந்தைகளை ஆட வைத்து, டிஆர்பியை ஏற்றியிருக்கிறார். சுட்டி சிறுமி தித்யா, லக்ஷ்மி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். தித்யாவின் ஒவ்வொரு டான்ஸ் மூவ்மெண்டும் கைத்தட்டல்களை அள்ளிக் குவிக்கிறது. டான்ஸ் மட்டுமின்றி, தித்யாவின் குறும்புத்தனங்களும் ஆடியன்சிடம் அப்ளாஸ் அள்ளுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பர்பாமென்ஸ் காட்ட வேண்டிய வேலைகள் எதுவும் இல்லை. அம்மாவாக மட்டுமே வந்து போகிறார். இவர்களை தாண்டி வில்லனாக அறிமுகமாகும் சல்மான் யூசப் கானின் நடனம் வாவ் சொல்ல வைக்கிறது. அதேபோல தித்யா டீமில் உள்ள குண்டுப் பையன் அர்னால்டின் (அஸ்வத்) ஆட்டம் அசரவைக்கிறது. எளிதில் யூகிக்கக் கூடிய வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால், ரியால்டி ஷோவின் சுவாரஸ்யம் மிஸ்சிங். படம் ஏபிசிடி பார்ட் 2 போலவே இருக்கிறது. பிளாஷ் பேக் காட்சியும் வலுவாக இல்லாததால், பிரபுதேவா - ஐஸ்வர்யா ராஜேஷ் உறவின் ஆழம் தெளிவாகாமல் போகிறது. 'இதுவரை ஜெயிச்சதே இல்லாத மாதிரி பிராக்டீஸ் பண்ணு, இதுவரை தோத்ததே இல்லாத மாதிரி பெர்ஃபார்ம் பண்ணு' உள்ளிட்ட அஜயன் பாலாவின் மோட்டிவேஷன் வசனங்களுக்கு தனி பாராட்டுக்கள். நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும், ஆண்டனியின் எடிட்டிங்கும் எமோஷனலான டான்ஸ் சினிமாவை கச்சிதமாக தந்துள்ளன.

லக்ஷ்மி செய்திகள்

லக்ஷ்மி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.8 /5 Your Rating

லக்ஷ்மி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+