லவ் டுடே - இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தானே இயக்கி நாயகனாக நடித்திருக்கும் காதல் & நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் இணைந்து 'எ.ஜி.எஸ் என்டர்டைன்மெண்ட்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
காதல் மற்றும் நகைச்சுவை திரைக்கதையில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு இணைந்து ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார்.
லவ் டுடே படத்தினை எ.ஜி.எஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, நடிகர் & தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினின் 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் விநியோகம் செய்துள்ளது.
லவ் டுடே படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/எ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2022 நவம்பர் 4ல் உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ளது.
லவ் டுடே திரைப்படத்தின் கதை
இத்திரைப்படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், தான் நடித்த ஷார்ட் பிலிமான அப்பா லாக் (App(a) Lock) கதையையே முழு நீளத் திரைப்படமாக எடுத்து நடித்துள்ளார்.
உருகி உருகி காதலிக்கிறோம் என பொண்ணோட அப்பாவிடம் ஹீரோ தைரியமாக சொல்ல, உன் செல்போனையும், என் மகள் செல்போனையும் ஒரு நாள் எக்ஸ்சேஞ்ச் பண்ணுங்க, நாளைக்கும் இதே மன நிலையில், இருந்தால் வந்து சொல்லுங்க கல்யாணம் பண்ணி வைக்கிறேன் என சத்யராஜ் போடும் செம கண்டிஷன் தான் இந்த படத்தின் கதை.