X
தமிழ் » திரைப்படங்கள் » மணியார் குடும்பம்
மணியார் குடும்பம்

மணியார் குடும்பம்

Comedy | 03 Aug 2018 | U | 118 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

மணியார் குடும்பம் கதை

மணியார் குடும்பம் இயக்குனர் தம்பி ராமையா இயக்கத்தில், உமாபதி ராமையா, மிருதுளா முரளி, சமுத்திரக்கனி, தம்பி ராமையா, ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்த நகைச்சுவை, காதல் திரைப்படம். இத்திரைப்படத்த்தினை இயக்கியது மட்டுமில்லாமல் தானே இசையமைத்துள்ளார் தம்பி ராமையா.  கதை :  மணியார் குடும்பத்தின் கதை ராராபுரம் ஊரின் பெரிய குடும்பம் இந்த மணியார் குடும்பம் தான். அப்பா சொத்தை குட்கார்ந்து தின்றே காலி செய்யும் நார்த்தங்காசாமிக்கு (தம்பி ராமையா), தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்து, டிபன் சாப்பிட்டுவிட்டு தின்னையில் அமர்ந்து வெட்டிக்கதை பேசுவது தான் வழக்கமான பணி. குடும்பத்தின் மாத செலவுக்கு வீட்டின் கதவுகளை விற்கும் அளவுக்கு தான் நிலைமை. ஆனால் அதை பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் வெள்ளை வேட்டி சட்டையில் பந்தாவாக பழைய பண்ணையார் கெட்டப்பிலேயே திரிகிறார். அப்பாவுக்கு தப்பாமல் இருக்கும் மகன் குட்டிமணியும் (உமாபதி) குடித்துவிட்டு ஊதாரித்தனமாக ஊரை சுற்றி திரிகிறார். தாய் மாமன் விவேக் பிரசன்னாவுடன் சேர்ந்து ஊருக்குள் அலப்பறை செய்கிறார். வேலை வெட்டி இல்லாத வெட்டி பையன் உமாபதியை உயிருக்கு உயிராக காதலிக்கிறார் அவரது அத்தை மகள் மகிழம்பூ (மிருதுளா முரளி). தந்தையின் எதிர்ப்பையும் மீறி ஊதாரியாக இருக்கும் உமாபதியை திருத்தி, கல்யாணம் செய்ய திட்டம் தீட்டுகிறார். அது என்ன ஆனது என்பது தான் க்ளைமாக்ஸ்.
Read More

மணியார் குடும்பம் நடிகர்கள் & படக்குழுவினர்

மணியார் குடும்பம் அணியின் தகவல்

இயக்குனர் தம்பி ராமையா
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை தம்பி ராமையா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

மணியார் குடும்பம் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தனிஒருவன் படத்தின் அரவிந்த்சாமியின் அப்பாவி தந்தையாக நடித்திருப்பார் தம்பி ராமையா. சிறிய கதாபாத்திரமான அதை அப்படியே முழுபடத்துக்கான கேரக்டராக மாற்றியிருக்கிறார். சூதுவாது தெரியாமல் வெகுளிதனமாக தம்பி ராமையா செய்யும் செயல்கள், சிரிப்பு, பிரதாபம், கோபம், பாவம் என மிக்ஸ்டு ரியாக்ஷன்களை வரவைக்கிறது. படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என அனைத்தையுமே செய்திருப்பவர் தம்பி ராமையா தான். ஒரு குடும்பத்தில் தந்தை சரியில்லை என்றால் அது என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அழமான காட்சியமைப்புகளின் வழியே பார்வையாளர்களுக்கு கடத்துகிறார். கணவன் ஊதாரியாகவே இருந்தாலும் அவரது மனம் கோணாமல் பார்த்துக்கொள்ளும் பெண்கள் ஒருபக்கம். கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு பிறந்த வீட்டுடன் உறவு பாராட்ட முடியாமல் தவிக்கும் பெண்கள் மற்றொரு பக்கத்தின். இதற்கிடையில், ஒரு பெண் நினைத்தால் ஆண்களை திருத்தி குடும்பத்தை நிலைநிறுத்த முடியும் என துணிச்சலாக களமிறங்கும் நவீன யுவதிகள் என மூன்று விதமான பெண்களையும் படத்தில் காட்டியிருக்கிறார் தம்பி ராமையா. இதற்காக தனித்தனியாக காட்சிகளை வைக்காமல், கதையினூடே அதை விளக்கிய விதம் சூப்பர்.

மணியார் குடும்பம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

மணியார் குடும்பம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+