மஞ்சப்பை 2014-ம் ஆண்டு ஜூன் 6-ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை என் ராகவன் இயக்க, சுபாஷ் சந்திரபோஸ் தயாரிக்க, விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் ஆகியோர் நடிக்க, கிப்ரான் இசையமைத்துள்ளார்.
கதை
தமிழ் (விமல்) தன் தாத்தாவால் தனியாக வளர்க்கப்பட்டார். தமிழ் வெளிநாடு செல்லவதில் ஆர்வமுள்ளவராக இருக்கிறார். அச்சமயத்தில் கார்த்திகா (லட்சுமி மேனன்) மீது காதல் வாய்ப்படுகிறார். ஆனால் கார்த்திகாவின் தந்தை விமல் வெளிநாடு சென்றால் தன் மகளை தரமுடியாது என்று கூறுகிறார். மறுபுறம் தமிழின் தாத்தா வெங்கடசாமி (ராஜ்கிரண்) கிராமத்து கதாப்பதிரமாக வந்து விமல் வெளிநாடு செல்வதில் சிக்கலை ஏற்படுத்துகிறார். அதனால் தமிழ் தன் தாத்தாவை இழிவாக பேசுகிறார். அதனால் வெங்கடசாமி தொல்லைந்து போகிறார். இறுதியில் தமிழ் வெளிநாடு சென்றாரா? தமிழ் மற்றும் கார்த்திகாவின் காதல் கைகூடியதா? வெங்கடசாமிக்கு என்ன ஆயிற்று? என்பதை விறுவிறுப்பாக கூறியுள்ளார் இயக்குனர்.