X
Mr. சந்திரமௌலி
Action | Comedy | Romance | 06 Jul 2018 | U/A | 141 Mins
Tamil

Mr. சந்திரமௌலி கதை

Mr. சந்திரமௌலி  தமிழ் அதிரடி காதல் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் திரு இயக்கத்தில், கார்த்திக், கெளதம் கார்த்திக், ரெஜினினா கசன்றா, வரலக்ஷ்மி சரத்குமார், சதீஷ் மற்றும் பலர் நடித்த திரைப்படம். 

கதை :

இரண்டு கால் டாக்ஸி கம்பெனிகளுக்கு இடையே ஏற்படும் வியாபாரப் போட்டியை, அப்பா, மகன் பாசம், காதல், பாக்ஸிங் என விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் திரு. ரியல் அப்பா - மகன் கார்த்திக், கவுதம் கார்த்திக் ஜோடி, படத்திலும் அப்பா - மகனாகவே நடித்திருப்பதே படம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல், திருப்பங்கள் மிகுந்த காட்சிகள் மூலம் விறுவிறுப்பாக படத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள்.

தாயில்லாத மகன் கவுதமை, அந்தக் குறை தெரியாமல் வளர்த்து ஆளாக்குகிறார் கார்த்திக். மகனுக்கு பாக்ஸிங் மீது காதல். அப்பாவுக்கோ அவரது பழைய பத்மினி கார் மீது தீராக்காதல். தன் மனைவியின் நினைவாக அந்தக் காரை வைத்திருப்பதாகக் கூறும் மிஸ்டர் சந்திரமௌலி (கார்த்திக்), அதற்காக செய்யும் அலப்பறைகள் வேற லெவல்.

காதல், காமெடி என முன்பாதி ஆமை வேகத்தில் நகர, திடீரென இடைவேளைக்கு முன் கார்த்திக் (ஸாரி.. அது சஸ்பென்ஸ்)... அதற்குப் பின் படத்தின் வேகம் அப்படியே மாறுகிறது. கண் பார்வை பாதிக்கப்படும் கவுதம், அப்பாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் ரகசியம், அதன் பின்னணியில் நடக்கும் மர்மங்கள் என சுவாரஸ்யமாக காட்சிகள் நகர்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+