X
தமிழ் » திரைப்படங்கள் » Mr. சந்திரமௌலி
Mr. சந்திரமௌலி

Mr. சந்திரமௌலி

Action | Comedy | Romance | 06 Jul 2018 | U/A | 141 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

Mr. சந்திரமௌலி கதை

Mr. சந்திரமௌலி  தமிழ் அதிரடி காதல் நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தினை இயக்குனர் திரு இயக்கத்தில், கார்த்திக், கெளதம் கார்த்திக், ரெஜினினா கசன்றா, வரலக்ஷ்மி சரத்குமார், சதீஷ் மற்றும் பலர் நடித்த திரைப்படம்.  கதை : இரண்டு கால் டாக்ஸி கம்பெனிகளுக்கு இடையே ஏற்படும் வியாபாரப் போட்டியை, அப்பா, மகன் பாசம், காதல், பாக்ஸிங் என விறுவிறுப்பு குறையாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் திரு. ரியல் அப்பா - மகன் கார்த்திக், கவுதம் கார்த்திக் ஜோடி, படத்திலும் அப்பா - மகனாகவே நடித்திருப்பதே படம் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல், திருப்பங்கள் மிகுந்த காட்சிகள் மூலம் விறுவிறுப்பாக படத்தை கொண்டு சென்றிருக்கிறார்கள். தாயில்லாத மகன் கவுதமை, அந்தக் குறை தெரியாமல் வளர்த்து ஆளாக்குகிறார் கார்த்திக். மகனுக்கு பாக்ஸிங் மீது காதல். அப்பாவுக்கோ அவரது பழைய பத்மினி கார் மீது தீராக்காதல். தன் மனைவியின் நினைவாக அந்தக் காரை வைத்திருப்பதாகக் கூறும் மிஸ்டர் சந்திரமௌலி (கார்த்திக்), அதற்காக செய்யும் அலப்பறைகள் வேற லெவல். காதல், காமெடி என முன்பாதி ஆமை வேகத்தில் நகர, திடீரென இடைவேளைக்கு முன் கார்த்திக் (ஸாரி.. அது சஸ்பென்ஸ்)... அதற்குப் பின் படத்தின் வேகம் அப்படியே மாறுகிறது. கண் பார்வை பாதிக்கப்படும் கவுதம், அப்பாவைப் பற்றி தெரிந்து கொள்ளும் ரகசியம், அதன் பின்னணியில் நடக்கும் மர்மங்கள் என சுவாரஸ்யமாக காட்சிகள் நகர்கிறது.
Read More

Mr. சந்திரமௌலி நடிகர்கள் & படக்குழுவினர்

Mr. சந்திரமௌலி அணியின் தகவல்

இயக்குனர் திரு
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சாம் சி எஸ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

Mr. சந்திரமௌலி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தனது முந்தைய மூன்று படங்களிலும் விஷாலை இயக்கிய திரு, இப்படத்தில் முதன்முறையாக கவுதம் கார்த்திக்கை நாயகனாக்கியிருக்கிறார். ஆனால், பல இடங்களில் சந்திரமௌலி, விஷாலின் நான் சிகப்பு மனிதனை ஞாபகப்படுத்துகிறான் என்பது மறுக்க முடியாது. சராசரியாகச் சென்று கொண்டிருக்கும் நாயகன் வாழ்க்கை, திடீரென ஒரு சம்பவத்தால் மாறுவது, உடல்நலக் குறைபாட்டால் நாயகன் பாதிக்கப்படுவது, எதிரியை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குவது, எதிர்பார்க்காத நொடியில் வில்லனின் வேறுமுகம் என அதே நான் சிகப்பு மனிதன் பார்முலா தான் சந்திரமௌலியிலும். தமிழ்த் திரையுலகம் காலம் காலமாக கையாண்டு வரும் "பார்முலா" ஹீரோயினாக வருகிறார் ரெஜினா. இரண்டு பாடல்களில் கவர்ச்சி விருந்து, அது தவிர படம் முழுவதும் நாயகனுடன் வருவது என ரெஜினாவிற்கு படத்தில் பெரிய வேலையில்லை. அதனால், படத்தின் நாயகி ரெஜினாவை விட, சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் வரலட்சுமியின் நடிப்பு கவர்கிறது. கார்த்திக்கும், அவரும் வரும் காட்சிகள் கண்களுக்கு விருந்தாகின்றன. கடைசி வரை இருவருக்கும் இடையில் உள்ள உறவு காதலா, நட்பா என்பதை விரிவாகச் சொல்லாமல் விட்டது இயக்குநரின் சாமர்த்தியம்.

Mr. சந்திரமௌலி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

Mr. சந்திரமௌலி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+