twitter

    நானே வருவேன் கதை

    நானே வருவேன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனது 'V Creations' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இந்துஜா, பிரபு, யோகி பாபு, செல்வராகவன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

    நானே வருவேன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2022 செப்டம்பர் 29ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.




    நானே வருவேன் திரைப்படத்தின் கதை

    கதைக்கரு

    நல்லவன் & தீயவன் என ஒரு இரட்டையரின் கதை. பாவத்தை செய்து மறைத்து வாழும் ஒருவனை பழிவாங்க மற்றொருவரின் போராட்டம் தான் இப்படத்தின் கதைக்கரு.

    கதை

    பிரபு, கதிர் என ட்வின்ஸ் (தனுஷ்) அப்பா அம்மாவுடன் வாழ்ந்து வருகின்றனர். சின்ன வயசுலேயே பழுத்த பிஞ்சாக பெண் ஒருவருடைய பாவாடையை கதிர் (தனுஷ்) எரிக்கிறார். அதற்காக அவரது அம்மா அப்பா அடித்து ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வைக்கின்றனர். 

    பின்னர் ஹண்டர் போல வரும் செல்வராகவன் உடன் சகவாசம் கொள்கிறார் கதிர். அங்கே இருந்து கட் பண்ணா, பல ஆண்டுகள் கழித்து பெரிய தனுஷாக பிரபு தனது மனைவி இந்துஜா மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது மகளுக்கு ஏதோ அமானுஷ்ய குரல்கள் கேட்பது படத்தை ஹாரர் படமாக மாற்றுகிறது.

    மகள் மூலமாக நடக்கும் விஷயத்தில் அண்ணன் தனுஷ் கதிர் பற்றிய கதையும் அவன் சொந்த குடும்பத்துக்கே பண்ண கொடூரத்தையும் புரிந்து கொள்ளும் தம்பி பிரபு (தனுஷ்) தனது மகளையும் அண்ணன் தனுஷிடம் சிக்கிக் கொண்டிருக்கும் கதிரின் மகனையும் காப்பாற்ற போராடும் முயற்சி கை கொடுத்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.

    நானே வருவேன் படத்தின் பிரத்யேக தகவல்கள்

    கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன், கர்ணன் போன்ற பிரமாண்ட படைப்பிற்கு பின்னர் உருவாகியுள்ள திரைப்படம், நானே வருவேன். வர்த்தக ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு 'Pre Business Report' என்னும் ரிலீஸ்-க்கு முன்னதாக நடக்கக்கூடிய வியாபாரத்தில் இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

    செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் பல வெற்றி படைப்புகளுக்கு பின்னர் உருவாகியுள்ள இப்படத்தினை தமிழ் திரைப்பட ரசிகர்கள் பலர் கொண்டாடி வருகின்றனர்.


    இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முன்னதாக காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, யாரடி நீ மோஹினி, புதுப்பேட்டை என பல வெற்றி படங்களில் தனுஷ் உடன் இனைந்து பணியாற்றியுள்ளார். இந்த கூட்டணியின் முந்திய படங்களை போன்று இப்படத்தின் இசையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. பட்டாஸ், கோடி படத்திற்கு பின் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம், நானே வருவேன். 

     
    ஓடிடி & தொலைக்காட்சி உரிமை

    நானே வருவேன் திரைப்படம் 2022 செப்டம்பர் 29ல் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகிறது, பின் இப்படத்தினை ஆன்லைன் ஓடிடியில் ஒளிபரப்புவதற்கான ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை 'அமேசான் பிரைம் வீடியோ' நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது.
    **Note:Hey! Would you like to share the story of the movie நானே வருவேன் with us? Please send it to us ([email protected]).