X
தமிழ் » திரைப்படங்கள் » நானே வருவேன்
நானே வருவேன்

நானே வருவேன்

Drama | Psychological | Thriller | 29 Sep 2022 | U/A | 122 Mins
Tamil

2.7 /5 Users

3 /5 Filmibeat

நானே வருவேன் கதை

நானே வருவேன் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தனது ' V Creations ' நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அதிரடி - திரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இந்துஜா, பிரபு, யோகி பாபு, செல்வராகவன் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். நானே வருவேன் திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ' யு/ஏ ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2022 செப்டம்பர் 29ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. நானே வருவேன் படத்தின் டீசர், பாடல்கள் என முழு வீடியோக்கள் நானே வருவேன் படத்தின் போஸ்டர் & படப்பிடிப்பு புகைப்படங்கள் நானே வருவேன் படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் தகவல்கள் நானே வருவேன் திரைப்படத்தின் கதை கதைக்கரு நல்லவன் & தீயவன் என ஒரு இரட்டையரின் கதை. பாவத்தை செய்து மறைத்து வாழும் ஒருவனை பழிவாங்க மற்றொருவரின் போராட்டம் தான் இப்படத்தின் கதைக்கரு. கதை பிரபு, கதிர் என ட்வின்ஸ் (தனுஷ்) அப்பா அம்மாவுடன் வாழ்ந்து வருகின்றனர். சின்ன வயசுலேயே பழுத்த பிஞ்சாக பெண் ஒருவருடைய பாவாடையை கதிர் (தனுஷ்) எரிக்கிறார். அதற்காக அவரது அம்மா அப்பா அடித்து ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வைக்கின்றனர்.  பின்னர் ஹண்டர் போல வரும் செல்வராகவன் உடன் சகவாசம் கொள்கிறார் கதிர். அங்கே இருந்து கட் பண்ணா, பல ஆண்டுகள் கழித்து பெரிய தனுஷாக பிரபு தனது மனைவி இந்துஜா மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது மகளுக்கு ஏதோ அமானுஷ்ய குரல்கள் கேட்பது படத்தை ஹாரர் படமாக மாற்றுகிறது. மகள் மூலமாக நடக்கும் விஷயத்தில் அண்ணன் தனுஷ் கதிர் பற்றிய கதையும் அவன் சொந்த குடும்பத்துக்கே பண்ண கொடூரத்தையும் புரிந்து கொள்ளும் தம்பி பிரபு (தனுஷ்) தனது மகளையும் அண்ணன் தனுஷிடம் சிக்கிக் கொண்டிருக்கும் கதிரின் மகனையும் காப்பாற்ற போராடும் முயற்சி கை கொடுத்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை. நானே வருவேன் படத்தின் பிரத்யேக தகவல்கள் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில், நடிகர் தனுஷ் நடிப்பில் அசுரன், கர்ணன் போன்ற பிரமாண்ட படைப்பிற்கு பின்னர் உருவாகியுள்ள திரைப்படம், நானே வருவேன். வர்த்தக ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் இப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு 'Pre Business Report' என்னும் ரிலீஸ்-க்கு முன்னதாக நடக்கக்கூடிய வியாபாரத்தில் இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் பல வெற்றி படைப்புகளுக்கு பின்னர் உருவாகியுள்ள இப்படத்தினை தமிழ் திரைப்பட ரசிகர்கள் பலர் கொண்டாடி வருகின்றனர். செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படங்கள் இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா முன்னதாக காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, யாரடி நீ மோஹினி, புதுப்பேட்டை என பல வெற்றி படங்களில் தனுஷ் உடன் இனைந்து பணியாற்றியுள்ளார். இந்த கூட்டணியின் முந்திய படங்களை போன்று இப்படத்தின் இசையும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. பட்டாஸ், கோடி படத்திற்கு பின் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள திரைப்படம், நானே வருவேன்.  தனுஷ் படங்களில் யுவன் இசையமைத்த திரைப்பட ஆல்பம் பாடல்கள்   ஓடிடி & தொலைக்காட்சி உரிமை நானே வருவேன் திரைப்படம் 2022 செப்டம்பர் 29ல் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகிறது, பின் இப்படத்தினை ஆன்லைன் ஓடிடியில் ஒளிபரப்புவதற்கான ஓடிடி ஸ்ட்ரீமிங் உரிமையை ' அமேசான் பிரைம் வீடியோ ' நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது.
Read More

நானே வருவேன் நடிகர்கள் & படக்குழுவினர்

நானே வருவேன் அணியின் தகவல்

இயக்குனர் செல்வராகவன்
ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்
தொகுப்பாளர் பிரசன்ன ஜி.கே
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் கலைபுலி எஸ் தாணு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நானே வருவேன் விமர்சகர்களின் விமர்சனம்

மாலை மலர்
மொத்தத்தில் 'நானே வருவேன்' வென்றான்.
தினமலர் - சினிமா
நானே வருவேன் - வரலாம்
பிஹைண்ட் டாக்ஸ் விமர்சனம்
மொத்தத்தில் தனுஷின் நானே வருவேன் படம் – கெத்து காட்டி இருக்கிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
மொத்தத்தில் “நானே வருவேன்” இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம்.
ABP திரைவிமர்சனம்
நானே வருவேன்... விரும்பினால் படம் பார்க்க நீங்களும் வருவீர்கள்!

நானே வருவேன் ட்ரெய்லர்

Video Thumbnail

நானே வருவேன் பாடல்கள்

நானே வருவேன் செய்திகள்

நானே வருவேன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.7 /5 Your Rating

நானே வருவேன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+