Don't Miss!
- News
ரத கஜ துரக பதாதிகள்..ஈரோட்டில் கிழக்கில் திமுக படைத்தளபதிகள்..சிந்தாமல் சிதறாமல் "சக்கர வியூகம்"
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மறுபடியும் டைவர்ஸா? இயக்குநர் செல்வராகவன் போட்ட அந்த ட்வீட்டை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்!
சென்னை: தனது இரண்டாவது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் உடன் ஜாலியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை எல்லாம் கொண்டாடி வந்த இயக்குநர் செல்வராகவன் திடீரென இப்படியொரு ட்வீட் போட்டிருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. இயக்குநராக பல காதல் படங்களை இயக்கிய செல்வராகவன் இந்த ஆண்டு நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து சாணிக் காயிதம், விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த செல்வராகவன் தம்பி தனுஷை வைத்து இயக்கிய நானே வருவேன் படத்திலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
திரெளபதி, ருத்ர தாண்டவம் படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் பகாசூரன் படத்தில் நடித்துள்ளார் செல்வராகவன் விரைவில் அந்த படம் திரைக்கு வர காத்திருக்கிறது.
வனிதா
அக்காவுக்கு
வயசு
ஏற
ஏற
அழகு
கூடிட்டே
போகுதே..பார்த்து
பார்த்து
உருகும்
பேன்ஸ்!

நடிப்பும் இயக்கமும்
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன் இந்த ஆண்டு பீஸ்ட் மற்றும் சாணிக் காயிதம் படங்கள் மூலமாக நடிகராகவும் மாறி உள்ளார். தனுஷை வைத்து அவர் இயக்கிய நானே வருவேன் இந்த ஆண்டு இறுதியில் பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக வெளியானது. இடைவேளை வரை படம் வெறித்தனமாக இருந்த நிலையில், கிளைமேக்ஸ் காட்சிகள் ரசிகர்களுக்கு சற்றே பிடிக்கவில்லை.

மனைவியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த செல்வராகவன் கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து 3 குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை மனைவி மற்றும் குடும்பத்தினருடன் கோலாகலமாக செல்வராகவன் கொண்டாடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் டிரெண்டாகி வருகிறது. இந்நிலையில், திடீரென துணை குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

துணை என்பது கானல் நீர்
"தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது ? துணை என்பது கானல் நீர். நெருங்க நெருங்க தூரம் ஓடும்." என வாழ்க்கைத் தத்துவம் போல ஒரு ட்வீட்டை தட்டி விட்டிருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். அந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் என்ன ஆச்சி? என்றும் இரண்டாவது மனைவியையும் பிரிய போகிறீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மறுபடியும் டைவர்ஸா
இயக்குநர் செல்வராகவனின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் என்ன மறுபடியும் டைவர்ஸா? என்றும் அண்ணன், தம்பி இருவருக்கும் இதே வேலையா போச்சு என விளாசி உள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 17ம் தேதி திடீரென நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக அதிரடியாக அறிவித்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மனசாட்சி இல்லையா
என்னாது துணைக்கு யாரும் வேண்டாமா? உனக்கெல்லாம் மனசாட்சி இல்லையா என்றும் இப்படி தத்துவம் சொல்றவன் எல்லாம் 2 கல்யாணம் பண்ணிட்டு எல்லாத்தையும் அனுபவிச்சிட்டுத்தான் சொல்வானுங்க என்றும் நெட்டிசன்கள் இயக்குநர் செல்வராகவன் கீதாஞ்சலி செல்வராகவனை விவாகரத்து செய்யப் போகிறார் என்கிற முடிவுக்கே வந்தது போல கமெண்ட் போட்டு வருகின்றனர். செல்வராகவன் அடிக்கடி தனக்கு தோன்றும் தத்துவங்களை இதுபோல சொவ்லது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.