X
தமிழ் » திரைப்படங்கள் » நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

Comedy | 14 Jun 2019 | U | 128 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா கதை

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் ரியோ ராஜ், அறிமுக நடிகை ஷிரின் காஞ்சவாலா, ஆர் ஜே விக்னேஷ்காந்த் நடிக்கும் நகைச்சுவை கலந்த அரசியல் திரைப்படம்.  இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் தமிழ் திரையுலக முன்னணி நடிகருமான சிவகார்த்திகேயன் தனது எஸ்.கே ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஷபீர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் ஒளிப்பதிவாளர் செந்தில் குமாருடன் படத்தொகுப்பாளரான பின்னி ஆலிவர் மற்றும் தமிழ் அரசன் இணைந்து பணியாற்றியுள்ளனர். கதை ரியோ ராஜ், விக்னேஷ் காந்த் ஆகிய இருவரும் அனாதையாக வளர்ந்த இளைஞர்கள். இவர்களுக்கு அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று லட்சியத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இதற்காக இவர்கள் யூ டுப்-ல் சாதிக்க வேண்டும் என அதுவே கதி என சுற்றி வருகிறார்கள். இதற்காக இவர்களுக்கு தேவையான பண உதவி உள்ளிட்ட பலவற்றை அண்ணனாக இருக்கும் அரவிந்த் செய்து வருகிறார்.  ஒரு மாலில் பிராங்க் வீடியோ காரணமாக மிகவும் செல்வந்தரான ராதாரவி மற்றும் இப்படத்தின் நாயகி ஷிரின் ஆகியோரை கலாய்க்கிறார்கள். இதில் ஷிரின் ரியோவை அடித்து விடுகிறார். பின்னர் ராதாரவி-யுடன் நல்ல ஒரு அறிமுகம் கிடைக்கிறது. சில நாட்களில் ராதாரவி, ரியோ மற்றும் ஆர்.ஜே.விக்னேஷை அழைத்து, எதற்காக இதுபோன்று செயல்களை செய்கிறீர்கள் என்று கேட்டகிறார், அதற்கு அவர்கள் எங்களுக்கு அதிகமாக பணம் வேண்டும் என்பதால், இப்படி செய்கிறோம் என்று கூறுகிறார்கள். இதனை அறிந்த ராதா ரவி இவர்களுக்கு மூன்று சவால்களை வைக்கிறார். அந்த மூன்று சவால்களை தொடர்ந்து கதை நகைச்சுவையோடு நகர்கிறது. விளம்பரம் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2019-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதியில் படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. மேலும் இப்படமானது 2019 ஜூன் 14ல் திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவலை தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோஷன்ஸ் மற்றும் விளம்பர பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை பற்றி அறிய:  https://tamil.filmibeat.com/movies/nenjamundu-nermaiundu-oodu-raja/cast-crew.html
Read More

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா நடிகர்கள் & படக்குழுவினர்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா அணியின் தகவல்

இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஷபீர்
தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
கனா போன்ற ஒரு படத்தை எடுத்த சிவகார்த்திகேயன், இது மாதிரியான புதிய முயற்சிகளுக்கு கைக்கொடுத்திருப்பதற்கு பாராட்டுகள். ஆனால் இது போன்ற விஷப்பரீட்சைகளை இனி செய்யாதீர்கள் சிவா. டைமிங் காமெடி, கவுண்டர் பஞ்ச் டயலாக் என ரவுசு செய்கிறார் ரியோ. படத்தின் கதாநாயகன் வேடத்துக்கு இயல்பாக பொருந்துகிறார். ஆனால் காமெடியை தவிர தனக்கு வேறொன்றும் வராது என சத்தியம் செய்யாதக் குறையாக அடம்பிடிக்கிறார். நிறைய ஸ்பேஸ் இருந்தும், குறைவாகவே காமெடி செய்திருக்கிறார் விக்னேஷ்காந்த். இன்னும் கூடுதலாக சிரிக்க வைத்திருந்தால், நிறைய நிறைய ரசித்திருக்கலாம். எந்த காட்சியையும் சீரியசாக்காமல், போரடிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+