ஓடு ராஜா ஓடு கதை

    ஓடு ராஜா ஓடு நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜதின் ஷங்கர் ராஜ் ஆகிய இரு இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம். இப்படத்தில், குரு சோமசுந்தரம், சாருஹாசன், நாசர், ஆனந்த்சாமி, லக்ஷ்மி பிரியா, ஆஷிகா சல்வான், ரவிந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன்,மெல்வின் எம். ரஞ்சன், வினு ஜான், சோனா மற்றும் பலர் நடித்துள்ளார். படத்திற்கு பரிநாமன் பாடல் வரிகளை எழுத, டோசன் இசையமைத்துள்ளார்.

    கதை:

    வீட்டோடு கணவர் உத்தியோகம் பார்க்கும் வருங்கால எழுத்தாளர் மனோகரை (குரு சோமசுந்தரம்), அவரது மனைவி மீரா (லட்சுமி பிரியா) விஸ்வரூபம் படம் பார்ப்பதற்காக செட்டாப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்கிறார். தனது போதை நண்பர் பீட்டருடன் செட்டாப் பாக்ஸ் வாங்க செல்லும் மனோகர், நண்பனின் பாஸ் கஜபதியிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார். இருவரையும் நம்பி லம்பாக ஒரு தொகையை கொடுத்து, போதை மாமி (அப்படித்தாங்க பெயர் வெச்சுருக்காங்க) மங்களத்திடம் சரக்கு வாங்கி வர அனுப்புகிறார்கள் கஜபதியும் அவரது சுப்பீரியர் பாஸ் வீரபத்ரனும். பணத்தை அவர்கள் தொலைக்க நேரிட, இருவரும் தப்பித்தால் போதும் என ஓட ஆரம்பிக்கிறார்கள்.

    இதற்கிடையே பழைய தாதா காளிமுத்துவை (நாசர்) லயன் (கால பைரவி) மூலம் கொல்ல திட்டமிடுகிறார் அவரது சொந்த தம்பியும் வீரபத்திரனின் எதிரியுமான செல்லமுத்து. மற்றொருபுறம் காளிமுத்துவை பழிவாங்குவதற்காக நகுல் (அனந்த் சாமி), அவரது நண்பன் இம்ரான் மற்றும் மனைவி மேரியுடன் (ஆஷிகா)சேர்ந்து திட்டம் தீட்டுகிறார். இதற்கிடையே குப்பத்தில் வாழும் சிறுமி மலரும் (பேபி ஹரினி), சிறுவன் சத்யாவும் (மாஸ்டர் ராகுல்), மனோகரிடம் இருந்து பணத்தை அடித்து ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள். இப்படி தனித்தனியே நடக்கும் சம்பவங்கள் ஓரு கட்டகத்தில் ஓரே இடத்திற்கு வந்து நிற்கிறது. இதுதான் கதை. 
    **Note:Hey! Would you like to share the story of the movie ஓடு ராஜா ஓடு with us? Please send it to us (popcorn@oneindia.co.in).