X
தமிழ் » திரைப்படங்கள் » ஓடு ராஜா ஓடு
ஓடு ராஜா ஓடு

ஓடு ராஜா ஓடு

Comedy | Romance | 17 Aug 2018 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ஓடு ராஜா ஓடு கதை

ஓடு ராஜா ஓடு நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜதின் ஷங்கர் ராஜ் ஆகிய இரு இயக்குனர்கள் இணைந்து இயக்கியுள்ள திரைப்படம். இப்படத்தில், குரு சோமசுந்தரம், சாருஹாசன், நாசர், ஆனந்த்சாமி, லக்ஷ்மி பிரியா, ஆஷிகா சல்வான், ரவிந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன்,மெல்வின் எம். ரஞ்சன், வினு ஜான், சோனா மற்றும் பலர் நடித்துள்ளார். படத்திற்கு பரிநாமன் பாடல் வரிகளை எழுத, டோசன் இசையமைத்துள்ளார். கதை: வீட்டோடு கணவர் உத்தியோகம் பார்க்கும் வருங்கால எழுத்தாளர் மனோகரை (குரு சோமசுந்தரம்), அவரது மனைவி மீரா (லட்சுமி பிரியா) விஸ்வரூபம் படம் பார்ப்பதற்காக செட்டாப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்கிறார். தனது போதை நண்பர் பீட்டருடன் செட்டாப் பாக்ஸ் வாங்க செல்லும் மனோகர், நண்பனின் பாஸ் கஜபதியிடம் வசமாக சிக்கிக் கொள்கிறார். இருவரையும் நம்பி லம்பாக ஒரு தொகையை கொடுத்து, போதை மாமி (அப்படித்தாங்க பெயர் வெச்சுருக்காங்க) மங்களத்திடம் சரக்கு வாங்கி வர அனுப்புகிறார்கள் கஜபதியும் அவரது சுப்பீரியர் பாஸ் வீரபத்ரனும். பணத்தை அவர்கள் தொலைக்க நேரிட, இருவரும் தப்பித்தால் போதும் என ஓட ஆரம்பிக்கிறார்கள். இதற்கிடையே பழைய தாதா காளிமுத்துவை (நாசர்) லயன் (கால பைரவி) மூலம் கொல்ல திட்டமிடுகிறார் அவரது சொந்த தம்பியும் வீரபத்திரனின் எதிரியுமான செல்லமுத்து. மற்றொருபுறம் காளிமுத்துவை பழிவாங்குவதற்காக நகுல் (அனந்த் சாமி), அவரது நண்பன் இம்ரான் மற்றும் மனைவி மேரியுடன் (ஆஷிகா)சேர்ந்து திட்டம் தீட்டுகிறார். இதற்கிடையே குப்பத்தில் வாழும் சிறுமி மலரும் (பேபி ஹரினி), சிறுவன் சத்யாவும் (மாஸ்டர் ராகுல்), மனோகரிடம் இருந்து பணத்தை அடித்து ஜாலியாக ஊர் சுற்றுகிறார்கள். இப்படி தனித்தனியே நடக்கும் சம்பவங்கள் ஓரு கட்டகத்தில் ஓரே இடத்திற்கு வந்து நிற்கிறது. இதுதான் கதை. 
Read More

ஓடு ராஜா ஓடு நடிகர்கள் & படக்குழுவினர்

ஓடு ராஜா ஓடு அணியின் தகவல்

இயக்குனர் நிஷாந்த் ரவீந்திரன், ஜதின் ஷங்கர் ராஜ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஓடு ராஜா ஓடு விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஒரு சின்ன துண்டு பேப்பரில் விரிவாக எழுதிவிடலாம் இப்படத்தின் கதையை. ஆனால் படத்தில் வரும் கதாபத்திரங்களை பற்றி எழுத வேண்டும் என்றால் ஒரு நோட்டு பத்தாது. அவ்வளவு கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் பார்வையாளர்களின் மனதில் நிற்க வேண்டும் என்பதற்காக, சீட்டாகை, அன்புள்ள அரிப்பு, போதை மாமி, துணை மாப்பிள்ளை, ஒப்புக்கு சப்பான்ஸ் என ஒவ்வொருவருக்கும் ஒரு அடைமொழி, தனித்தனி ப்ளாஷ்பேக் காட்சிகள். கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் முடியும் போது இடைவேளை வந்துவிடுகிறது. ஆனால் இதற்காக இயக்குனர்களை ஒட்டுமொத்தமாக குறைசொல்லிவிட முடியாது. டார்க் ஹியூமர் கதை என்பதால் படத்தில் வரும் அத்தனை கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்ய நினைத்திருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் நிஷாந்தும், ஜத்தினும். படத்தில் பல இடங்களில் நகைச்சுவை காட்சிகள் திணிக்கப்பட்டிருப்பது துரித்திக்கொண்டு தெரிகிறது. அதுவும் பெண்களை செக்ஸ் பொருளாக காட்டியிருப்பது அவசியமற்றது. எப்போது பார்த்தாலும் கஞ்சா புகைக்கும் நண்பன், செக்ஸ் உணர்வோடு அழையும் பக்கத்து வீட்டுக்காரன், கணவனையும் அவனது நண்பனையும் ஒன்றாக பாக்கும் ஆகிஷா, பீட்டருடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் சோனா என பல தேவையற்ற விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. அதுவும் அந்த பவர் ஸ்டார் சேசிங் சீனெல்லாம் ஐயோயோயோ என புலம்ப வைக்குது. தோஷ் நந்தா இசையில் பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. அதேபோல பின்னணி இசையும் பிளாக் காமெடி உணர்வை தர மறுக்கிறது. திரைக்கதை எழுதி படத்தொகுப்பை கவனித்திருக்கிறார் நிஷாந்த். இத்தனை கதாபாத்திரங்களையும் ஒன்று சேர்க்க படாதபாடு பட்டிருக்கிறார்.

ஓடு ராஜா ஓடு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஓடு ராஜா ஓடு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+