»   »  24 மணி நேரம்... நான்கே பாத்திரங்கள்.. ஓடு ராஜா ஓடு!

24 மணி நேரம்... நான்கே பாத்திரங்கள்.. ஓடு ராஜா ஓடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நான்கு கதாபாத்திரங்களுக்குள் ஒரு நாளில் நடக்கும் கதை. நான்கு பேருக்கும் ஒவ்வொரு இலக்கு. அதனை அடைய அவர்கள் எடுக்கும் முயற்சிகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள். இந்த நால்வரும் ஒருவரை ஒருவர் சந்திக்கையில் என்ன நேர்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்களாம் ஓடு ராஜா ஓடு படத்தில்.

Odu Raja Odu, a comedy theriller

இந்தப் படத்தை எல்வி பிரசாத் அகடமியின் பட்டதாரிகளான நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜதின் ஷங்கர் ராஜ் இணைந்து இயக்கியுள்ளனர். இயக்கம் மற்றுமன்றி மற்ற துறைகளிலும் இந்த இரட்டையர்கள் பங்காற்றியுள்ளனர்.

நிஷாந்த் ரவீந்திரன் - எழுத்து, இயக்கம் மற்றும் படத்தொகுப்பு

ஜதின் ஷங்கர் ராஜ் - இயக்கம் மற்றும் ஒளிப்பதிவு.

Odu Raja Odu, a comedy theriller

30 ஆண்டுகளாகசெயல்பட்டு வரும் மூலன் குருப் நிறுவனத்தின் தலைவர் விஜய் மூலன் இப்படத்தின் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

Odu Raja Odu, a comedy theriller

சாருஹாசன், நாசர், 'ஜோக்கர்' புகழ் குரு சோமசுந்தரம், ஆனந்த்சாமி, லக்ஷ்மி பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் ஆஷிகா சல்வான், ரவிந்திர விஜய், வெங்கடேஷ் ஹரிநாதன், மெல்வின் எம். ரஞ்சன், வினு ஜான், சோனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Odu Raja Odu, a comedy theriller

வியாபாரி படத்தில், 'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்...' பாடலை எழுதிய பரிநாமன் இப்படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளார்.

டோஷ் இசையமைத்துள்ளார்.

English summary
Odu Raja Odu is a new comedy thriller directed by Nishanth Ravindiran - Jatin Shankar Raj.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil