X
ரெமோ
Comedy | Romance | 07 Oct 2016 | U |
Tamil

ரெமோ கதை

ரெமோ சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள காதல் நகைச்சவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்க, அனிருத் ரவிசந்தர் இசையமைக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவினை பி சி ஸ்ரீராம் செய்கிறார்.

கதை :

சிவகார்த்திகேயனுக்கு நடிக்கராக வேண்டும் என்பதே கனவாக இருக்கின்றது. வாய்ப்புகள் இல்லாத நேரத்தில், கே எஸ் ரவிக்குமாரை சந்திக்கிறார். சிவாவிற்கு ரொமான்ஸ் வரவில்லை என்றும், தான் அடுத்ததாக அவ்வை சண்முகி போன்ற திரைப்படத்தை எடுக்க போவதாகவும், அதில் ஹீரோ லேடி கெட்டப்பில் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார். 

பெண்களை கண்டாலே பயந்து ஓடும் சிவாவிற்கு கீர்த்தி சுரேஷை கண்டதும் அவர் மேல் காதல் மலர்கிறது. அவரை காண, அவரது வீட்டிற்கு செல்லகிறார் சிவா. ஆனால், அங்கு அவரின் முன்னே, கீர்த்தி சுரேஷிற்கு நிச்சயம் ஆகின்றது. 

அதனால், சிவகார்த்திகேயன் நர்ஸ் கெட்டப்பில் கே எஸ் ரவிக்குமாரை சந்திக்க செல்கிறார். ஆனால், சிவாவின் நடிப்பு அவருக்கு பிடிக்காததால், அதே வேடத்தோடு வீடு திரும்புகிறார். வீட்டிற்கு வரும் வழியில், யோகி பாபு பெண் வேடத்தில் இருக்கும் சிவாவிடம் சில்மிஷம் செய்கிறார். அதனை பார்த்த கீர்த்தி சுரேஷ் சிவாவை யோகியிடம் இருந்து காப்பாற்றிய கையோடு தான் டாக்டராக பணிபுரியும் மருத்துவமனையில் சிவாவிற்கு நர்ஸ் வேலை வாங்கி தருகிறார். 

இதனை தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பாக கருதி கீர்த்தி சுரேஷை காதலிக்க தொடங்குகிறார். சிவாவின் காதலும் சினிமா கனவும் இறுதியில் நிறைவடைந்ததா என்பதே மீதிக்கதை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+