X
ரெமோ

ரெமோ

Comedy | Romance | 07 Oct 2016 | U |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ரெமோ கதை

ரெமோ  சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்துள்ள காதல் நகைச்சவைத் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்க, அனிருத் ரவிசந்தர் இசையமைக்கிறார். இப்படத்தின் ஒளிப்பதிவினை பி சி ஸ்ரீராம் செய்கிறார். கதை : சிவகார்த்திகேயனுக்கு நடிக்கராக வேண்டும் என்பதே கனவாக இருக்கின்றது. வாய்ப்புகள் இல்லாத நேரத்தில், கே எஸ் ரவிக்குமாரை சந்திக்கிறார். சிவாவிற்கு ரொமான்ஸ் வரவில்லை என்றும், தான் அடுத்ததாக அவ்வை சண்முகி போன்ற திரைப்படத்தை எடுக்க போவதாகவும், அதில் ஹீரோ லேடி கெட்டப்பில் இருக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.  பெண்களை கண்டாலே பயந்து ஓடும் சிவாவிற்கு கீர்த்தி சுரேஷை கண்டதும் அவர் மேல் காதல் மலர்கிறது. அவரை காண, அவரது வீட்டிற்கு செல்லகிறார் சிவா. ஆனால், அங்கு அவரின் முன்னே, கீர்த்தி சுரேஷிற்கு நிச்சயம் ஆகின்றது.  அதனால், சிவகார்த்திகேயன் நர்ஸ் கெட்டப்பில் கே எஸ் ரவிக்குமாரை சந்திக்க செல்கிறார். ஆனால், சிவாவின் நடிப்பு அவருக்கு பிடிக்காததால், அதே வேடத்தோடு வீடு திரும்புகிறார். வீட்டிற்கு வரும் வழியில், யோகி பாபு பெண் வேடத்தில் இருக்கும் சிவாவிடம் சில்மிஷம் செய்கிறார். அதனை பார்த்த கீர்த்தி சுரேஷ் சிவாவை யோகியிடம் இருந்து காப்பாற்றிய கையோடு தான் டாக்டராக பணிபுரியும் மருத்துவமனையில் சிவாவிற்கு நர்ஸ் வேலை வாங்கி தருகிறார்.  இதனை தனக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பாக கருதி கீர்த்தி சுரேஷை காதலிக்க தொடங்குகிறார். சிவாவின் காதலும் சினிமா கனவும் இறுதியில் நிறைவடைந்ததா என்பதே மீதிக்கதை.
Read More

ரெமோ நடிகர்கள் & படக்குழுவினர்

ரெமோ அணியின் தகவல்

இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அனிருத் ரவிச்சந்தர்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ரெமோ விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தமிழ் சினிமா என்றல்ல.. எந்த மொழிப் படமாக இருந்தாலும் கதைகள் பழசுதான். அந்தக் கதைகளுக்கு திரைக்கதை என்ற பெயரில் போடப்படும் 'பாலீஷ்'தான் படங்களை ஓட வைக்கின்றன, பார்க்க வைக்கின்றன. அப்படி பாலீஷ் பண்ணப்பட்ட சில பழைய கதைகளின் 'மிக்சர்'தான் இந்த ரெமோ. படத்தில் புதிதாக ஒன்றுமில்லை, பெண் வேடம் போட்ட சிவகார்த்திகேயனைத் தவிர. ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். பெண் வேடம் போடுவது அத்தனை சாதாரண விஷயமா... குறிப்பாக 'நிச்சயதார்த்தம் முடிந்த பெண்ணை திட்டமிட்டு, மனசு மாற்றி, விரட்டி விரட்டிக் காதலிப்பது' என்ற கதைக் கருவை மாற்றியிருக்கலாம். சமூக உளவியலில் இதுபோன்ற படங்கள் ஏற்படுத்தும் தாக்கம் ஆபத்தானதும் கூட. ரெமோ வேடத்தில் வரும் சிவகார்த்திகேயன் கீர்த்திக்கு மொட்டை மாடியில் வைத்து வாணவேடிக்கை காட்டிவிட்டு, அடுத்த 5வது நிமிடத்தில் எஸ்கே வாக மாறி பூங்கொத்து கொடுப்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் க்ளைமாக்ஸ் பைட்டுக்கு முன் கீர்த்தி போன் பண்ணதும், நர்ஸ் கெட்டப்பிலேயே வந்து நிற்கிறாரே அதைத்தான்... ஷ்ஷப்பா! 9வது படத்திலேயே ஆல் க்ளாஸ் ஆடியன்ஸும் கொண்டாடும் நாயகனாகிவிட்ட சிவகார்த்திகேயன், ரெமோ, எஸ்கே என இரு கெட்டப்புகளிலுமே மாஸ் காட்டுகிறார். மக்கள் அப்படி ரசிக்கிறார்கள். நிச்சயம் இது சாதாரண விஷயமல்ல. கீர்த்தி சுரேஷ் கொள்ளை அழகு. நடிப்பிலும் குறை வைக்கவில்லை. நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கும் நிச்சயமாகாத காதலுக்கும் நடுவில் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் தேர்ந்த முக பாவங்கள். சதீஷ், யோகி பாபு, ராஜேந்திரன் மூவரும் பிரதான காமெடியன் இல்லாத குறையே தெரியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். குறிப்பாக யோகி பாபு பஸ் பஸ்ஸாக ரெமோவைத் தேடும் காட்சி. பார்த்துப் பழகிய கதையை நர்ஸ் கெட்டப் சிவகார்த்திகேயன் மூலம் வித்தியாசப்படுத்திக் காட்ட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் முயன்றிருக்கிறார். ஆனால் திரைக்கதையை இன்னும் செதுக்கியிருக்கலாம்.

ரெமோ திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ரெமோ

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+