twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பவித்ரா முதல் ரெமோ வரை.. தாயுள்ளம் கொண்ட செவிலியர்களை கொண்டாடிய தமிழ் சினிமா #உலகசெவிலியர்தினம்

    |

    சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு உயிரையும் தனது குழந்தைகளாய் நினைத்து தாயுள்ளத்துடன் பணிவிடை செய்யும் அனைத்து செவிலியர்களுக்கும் உலக செவிலியர் தின வாழ்த்துக்கள்.

    தமிழ் சினிமாவிலும் செவிலியர்களின் சேவையை போற்றி பல படங்களில் பல முன்னணி நடிகர்கள் நர்ஸ் வேடம் ஏற்று நடித்து அசத்தி உள்ளனர்.

    பவித்ரா முதல் ரெமோ வரை தமிழ் சினிமா கொண்டாடிய செவிலியர்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்துல இவரும் இருக்காராம்.. தயாரிப்பு தரப்பு தகவல்!விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்துல இவரும் இருக்காராம்.. தயாரிப்பு தரப்பு தகவல்!

    பவித்ரா – ராதிகா

    பவித்ரா – ராதிகா

    தல அஜித் நடிப்பில் 1994ம் ஆண்டு வெளியான படம் பவித்ரா. அசோக் எனும் கேன்சர் நோயாளியாக அஜித் நடித்திருப்பார். அந்த படத்தில், செவிலியராக நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருப்பார். தனது குழந்தையை இழந்த அந்த தாய், நடிகர் அஜித்தை தனது மகனாக நினைத்தது சேவை செய்வதும், அவருக்காக கண்ணீர் சிந்துவதுமாக ஒரு தாயுள்ளம் கொண்ட செவிலியரை முழுவதுமாக பிரதிபலித்து இருப்பார்.

    மனதில் உறுதி வேண்டும் – சுஹாசினி

    மனதில் உறுதி வேண்டும் – சுஹாசினி

    பாலசந்தர் இயக்கத்தில் சுஹாசினி மணிரத்னம் மற்றும் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நடிப்பில் 1987ம் ஆண்டு வெளியான படம் மனதில் உறுதி வேண்டும். நந்தினி எனும் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிகை சுஹாசினி தனது சிறப்பான நடிப்பையும் கஷ்டங்கள் நிறைந்த வாழ்விலும், நோயாளிகளிடம் கருணையை காட்டும் சிறந்த செவிலியராக நடித்து இருப்பார். எஸ்.பி.பி மருத்துவராகவும், சுஹாசினிக்கு மன உறுதியை ஊட்டும் கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்.

    பூவெல்லாம் கேட்டுப்பார் – ஜோதிகா

    பூவெல்லாம் கேட்டுப்பார் – ஜோதிகா

    இயக்குநர் வசந்த் இயக்கத்தில் 1999ம் ஆண்டு சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான படம் பூவெல்லாம் கேட்டுப்பார். காதலுக்காக கல்யாணி எனும் கதாபாத்திரத்தில் நடித்த ஜோதிகா, சூர்யாவின் வீட்டில் நர்ஸாக நடித்து அசத்தி இருப்பார். ஞாபக சக்தி குறைபாடு உள்ள மருத்துவராக கோவை சரளா நடிகை ஜோதிகாவை கண்டுபிடிக்க போராடும் காட்சிகள் சிரிப்பலையை உருவாக்கி இருக்கும்.

    காக்கிச்சட்டை – ஸ்ரீதிவ்யா

    காக்கிச்சட்டை – ஸ்ரீதிவ்யா

    துரை செந்தில்குமார் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான சிவகார்த்திகேயனின் காக்கிச்சட்டை படத்தில் திவ்யா எனும் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா நடித்திருப்பார். போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு, தனது மருத்துவமனையில் நடக்கும் அநியாயங்களை தடுக்க தனது உயிரையும் துச்சமாக நினைத்து பல விஷயங்களை செய்து அசத்தியிருப்பார்.

    ரெமோ – சிவகார்த்திகேயன்

    ரெமோ – சிவகார்த்திகேயன்

    நர்ஸ் கதாபாத்திரத்தில் பல ஹீரோயின்கள் நடித்திருந்ததை கண்ட தமிழ் சினிமா, முதன்முதலாக நர்ஸ் கதாபாத்திரத்தில் ஒரு ஹீரோவை கண்டு ரசித்த படம் தான் ரெமோ. டாக்டராக இருக்கும் கீர்த்தி சுரேஷை கரெக்ட் பண்ண நர்ஸ் கதாபாத்திரத்தை போட்டாலும், குழந்தைகள் ஊசி போட்டுக் கொள்ள பயப்படாத அளவுக்கு ஃபேண்டஸி நர்ஸாக மாறி செவிலியர்களின் பெருமையை நிலைநாட்டி இருப்பார்.

    English summary
    Today InternationalNursesDay celebrated all over the world. Tamil Cinema remember the service of Nurses and their caring in several movies. Here we list out some movies to catch up.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X