இந்த பிளாக் பஸ்டர் படங்களின் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயனா?
சென்னை : தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகி வருகிறார் சிவகார்த்திகேயன். நீண்ட காலமாக காத்திருக்கும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் அக்டோபர் 9 ம் தேதி ரிலீசாக உள்ளது. இவரின் அயலான், டான் படங்களும் வரிசையாக ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
தற்போது சிவகார்த்திகேயன் சிங்க பாதை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து புதிய படங்கள் சிலவற்றில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேசப்பட்டு வருகிறதாம். படங்களில் நடிப்பதுடன் தயாரிப்பது, பாடல் வரிகள் எழுதுவது, பின்னணி பாடுவது என பிஸியாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இரண்டாம் பாகமா
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த இரண்டு பிளாக் பஸ்டர் படங்களான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரெமோ படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்க திட்டமிடப்பட்டு வருகிறதாம். இந்த படங்களிலும் சிவகார்த்திகேயனே நடிக்க போவதாக கூறப்படுகிறது.

இதுவரை இல்லை
சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இதுவரை எந்த படமும் இரண்டாம் பாகம் இயக்கப்படவில்லை. இதனால் பிளாக் பஸ்டர் படங்களான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரெமோ படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கினால் என்ன தனது டீமுடன் பேசி வருகிறாராம் சிவகார்த்திகேயன்.

சந்தேகத்தில் சிவகார்த்திகேயன்
ஆனால் தனித்துவமான கதையம்சம் கொண்ட இந்த படங்களைப் போல் இதுவரை எந்த படத்தையும் இயக்க முடியாது என்ற அழுத்தம் இருப்பதால், ஏற்கனவே தனித்துவம் படைத்து விட்ட இந்த படங்களின் இரண்டாம் பாகத்தை எப்படி இயக்குவது, அப்படி இயக்கினால் அது மக்கள் ரசிக்கும் படி இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதாம்.

நர்ஸ் கேரக்டர் வேண்டாமா
சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பிலும், ரெமோ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடியுமா என தெரியவில்லை. நர்ஸ் கேரக்டர் இல்லாமல் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை கொண்டு போக முடியுமா என்பதை டீம் சிந்தித்து வருவதாக சிவகார்த்திகேயன் தெரிவித்தார். ஆனால் இந்த படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கலாம் என்ற எண்ணமும் சிவகார்த்திகேயனுக்கு உள்ளதாம்.

சூரியுடன் காம்போ
சூரி - சிவகார்த்திகேயன் காம்போவில் உருவாக படங்கள் அனைத்தும் ஹிட்டாகி உள்ளன. அந்த வரிசையில் இருவரும் இணைந்து தற்போது டான் படத்தில் நடித்து வருகின்றனர். அதோடு டாக்டர் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளையும் கவனித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.


Click it and Unblock the Notifications











