»   »  சிவகார்த்திகேயனின் கேரள ரசிகர்களுக்கு ஜாலிதான்... ஆனால்..?

சிவகார்த்திகேயனின் கேரள ரசிகர்களுக்கு ஜாலிதான்... ஆனால்..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான படம் 'ரெமோ'. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நர்ஸ் கெட்டப்பில் ரசிகர்களை ஆச்சரியப் படுத்தினார். விமர்சன ரீதியாக சில எதிர்ப்புகளைச் சந்தித்தாலும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியிருந்த இப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான படம் என்று கூறலாம்.

இப்படம் மலையாளம், தெலுங்கிலும் ரெமோ என்ற பெயரிலேயே டப் செய்து ரிலீஸ் செய்யப்பட்டது. இரண்டு மொழிகளிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

Sivakarthikeyan's kerala fans are happy now. But?

இந்தப் படம் தெலுங்கில் சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இதன் டி.ஆர்.பி ரேட் 8.9 ஆகப் பதிவாகியுள்ளது. ஒரு டப்பிங் படத்திற்கு இவ்வளவு டி.ஆர்.பி வருவது ஆச்சரியம் தான்.

இந்நிலையில் இப்படம் மலையாளத்தின் பிரபலமான ஏசியாநெட் தொலைக்காட்சியில் நாளை மாலை 4 மணியளவில் ஒளிபரப்பப்பட இருக்கிறது. இந்தத் தகவல் சிவகார்த்திகேயனின் மலையாள ரசிகர்களுக்குக் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. ஆனால், விரைவாகவே தொலைக்காட்சிகளில் வெளியாவதால், பிறமொழிகளில் வளர்ந்துவரும் சிவகார்த்திகேயனுக்கு பின்னடைவைக் கொடுக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ரெமோ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மாறுபட்ட கதைக்களத்தில் மோகன்ராஜா இயக்கத்தில் 'வேலைக்காரன்' என்ற படத்தில் தற்போது நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sivakarthikeyan's 'Remo' movie will be telecasting on Asianet channel tomorrow.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil