»   »  ரெமோ, தொடரி, றெக்க, இருமுகன்... பொங்கலுக்கு டிவியில் புதுப்படங்கள்

ரெமோ, தொடரி, றெக்க, இருமுகன்... பொங்கலுக்கு டிவியில் புதுப்படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தை பொங்கல் திருநாளுக்கு இன்னும் ஒருவாரம் உள்ளது. பொங்கலுக்கு 3 நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால் தொலைக்காட்சிகளில் புத்தம் புது படங்கள், சிறப்பு நிகழ்ச்சிகள் களை கட்டும்.

ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே நேயர்களையும், விளம்பர நிறுவனங்களையும் ஈர்க்க முன்னோட்டத்தை தொடங்கி விடுவார்கள். இந்த ஆண்டு சிவகார்த்திக்கேயன், தனுஷ், விஜய் சேதுபதி, விக்ரம் நடித்த புத்தம் புதிய திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக உள்ளன.


எப்பவுமே சன்டிவிதான் புது படங்களை ஒளிபரப்புவதில் முந்திக்கொள்ளும். இந்த ஆண்டு ஜெயாடிவி, ஜீ தமிழ் டிவி, விஜய் டிவி என பல சேனல்களும் கோதாவில் குதித்துள்ளன. ரெமோ, றெக்க, தேவி படங்கள் ஒரே நாளில் திரையில் ரிலீஸ் ஆனது. இப்போது பொங்கலுக்கு டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. டிஆர்பியில் எந்த படம் முந்துகிறதோ?


ஜெயாடிவியில் ரெமோ

ஜெயாடிவியில் ரெமோ

கடந்த வருடத்தின் வசூல் லிஸ்டில் நம்பர் ஒன் 'ரெமோ'. எஸ்.கே.வின் ரொமான்ஸூம், நர்ஸ் ரெமோவின் கலாட்டாவும், டாக்டர் காவ்யாவின் சுட்டித்தனமுமாக எல்லோரின் லைக்ஸூம் குவித்த படம். அனிருத் இசை, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு என்று கலர்ஃபுல் ரெமோ ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பாகிறது


தனுஷ் நடித்த தொடரி

தனுஷ் நடித்த தொடரி

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய தொடரியும் ஒளிபரப்பாகிறது. இது தவிர மீன்குழம்பும் மண்பானையும் ஆகிய திரைப்படங்களும் ஜெயா டிவியில் ஒளிபரப்பாகின்றன.


ஜீ தமிழில் றெக்க, இருமுகன்

ஜீ தமிழில் றெக்க, இருமுகன்

புதுப்படங்களான விஜய்சேதுபதி, லட்சுமிமேனன் நடிப்பில் உருவான அதிரடி ஆக்‌ஷன் படமான றெக்க திரைப்படம் பொங்கல் திருநாள் தினத்திலும் விக்ரம், நயன்தாரா நடிப்பில் வெளியான ‘இருமுகன்' படம் மாட்டுப்பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பவிருக்கிறது. தவிர, 'சேதுபதி' மற்றும் 'ஒரு நாள் கூத்து' இரண்டு படங்களும் ஒளிபரப்பாகவிருக்கின்றன.


சன்டிவியில் கொடி, றெக்க

சன்டிவியில் கொடி, றெக்க

சன் டிவியில் தனுஷ், த்ரிஷா, அனுபமா நடிப்பில் துரைசெந்தில் குமார் இயக்கிய படம் கொடி. முதன்முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதால் பெரிதும் பேசப்பட்ட படம். கடந்த தீபாவளிக்கு ரிலீஸாகி, பொங்கலுக்கே டிவியில் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது.


ஏ.எல் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியாகிப் பெரிய ஹிட்டடித்த படம் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.விஜய் டிவியில் எம்.எஸ் டோணி

விஜய் டிவியில் எம்.எஸ் டோணி

இந்திய கிரிக்கெட் விளையாட்டின் கேப்டன் பதவியிலிருந்து டோணி விலகுவதாக அறிவித்திருப்பதால் அவர்களது ரசிகர்கள் செம அப்செட்டில் உள்ளனர். டோணிக்கு பெருமை சேர்க்கும் விதமாக விஜய் டிவியில் தோனியின் பயோபிக் படமான எம்.எஸ். டோணி பொங்கல் திருநாளில் ஒளிபரப்பாக உள்ளது.


ஜி.வி.பிரகாஷ், நிக்கிகல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளியாகி காமெடியில் சேட்டை செய்த கடவுள் இருக்கான் குமாரு மாட்டுப்பொங்கல் தினத்தில் ஒளிபரப்பாகிறது.English summary
Remo on Jaya TV, Rekka on Zee Tamil TV, M.S.Dhoni to premiere on Vijay TV for Pongal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil