ஸ்பைடர் மேன்: பார் ப்ரம் ஹோம் கதை

  ஸ்பைடர் மேன் : பார் ப்ரம் ஹோம் இயக்குனர் ஜான் வாட்ஸ் இயக்கத்தில் டாம் ஹொலண்ட், பெஞ்சமின், ஜாக்சன் நடித்துள்ள அதிரடி மற்றும் அறிவியல் புனைவு திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கெவின் பெய்ஜ் மற்றும் எமி பாஸ்கல் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் மைக்கெல் கியச்சினோ இசையமைத்துள்ளார்.

  ஸ்பைடர் மேன்

  சிலந்தி மனிதன் என்று தமிழில் அழைக்கப்படும் ஸ்பைடர் மேன் கதாபாத்திரமானது மார்வெல் ஸ்டுடியோஸ் சார்பில் ஸ்டான் லீ என்பவரால் உருவாக்கப்பட்டது. 1990-ஆம் ஆண்டுகளில் மார்வெல் நிறுவனத்தின் நிதி பற்றாக்குறையால் மார்வெல் நிறுவனம் ஒரு சில கதாபாத்திரங்களின் உரிமையை வேறு நிருவத்திற்கு விற்கத்தொடங்கியுள்ளது. அச்சமயம் ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தின் உரிமையை ஸோனி பிக்சார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

  அதனை தொடர்ந்து ஸ்பைடர் மேன் சார்ந்த திரைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தும் இருநிறுவதின் அனுமதியுடனே வெளியாகியுள்ளது.

  சூப்பர் ஹீரோ திரைப்படமான இத்திரைப்படத்தினை மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் ஸோனி பிக்சார்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படம், 2017-ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்பைடர் மேன் திரைப்படத்தினை தொடர்ந்து, தற்போது வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ளது.

  2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் நாளில் மார்வெல் மற்றும் டிஸ்னி பிக்சார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் இல்லை என்று ஸோனி நிறுவனம் பிரிந்துள்ளது. ஸ்பைடர் மேன் கதாபாத்திரத்தின் காப்பிடு வைத்துள்ள ஸோனி நிறுவனம் இனி மார்வெல் யுனிவெர்ஸ் மற்றும் டிஸ்னி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற போவதில்லை, ஸ்பைடர் மேன் திரைப்படம் புது பொலிவுடன் இனி உருவாக்கப்படும் என ஸோனி நிறுவனம் கூறியுள்ளது. இதனை தொடர்நது மார்வெல் ஸ்டுடியோஸ்-ன் ஸ்பைடர் மேன் சீரிஸ் முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

  கதை

  2019-ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் டோனி ஸ்டார்க்- யின் உயிர் இழப்பிற்கு பின்னர், அவெஞ்சர்ஸ் குழு மாற்றியமைக்க படுகிறது. கல்லூரி மாணவனான ஸ்பைடர் மேன் தனது விடுமுறைக்காக கல்லூரி நண்பர்களுடன் ஐரோப்பா நாட்டிற்க்கு செல்கிறார்.

  அவெஞ்சர்ஸ் திரைப்படம் இறுதியில் டோனி ஸ்டார்க்-யின் சொடக்கால் பிர்பஜத்தில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் வேறு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மந்திர சக்தி உள்ள ஒருவர் பூமிக்கு வந்தடைகிறார். பின்னர் இவருடன் நிக் பியூரி கைகோர்த்து ஸ்பைடர் மேன் என்னும் டாம் ஹொலண்ட்-ஐ தேடி கண்டறிகிறார்.

  பல சூப்பர் ஹீரோக்கள் இருப்பினும் கல்லூரி மானவனான ஸ்பைடர் மேனை இவர் தேடுவதற்கு காரணம் என்ன? பின்னர் இருவரும் இனைந்து எதிர்க்கும் வில்லன் யார்? என்பதே திரைக்கதை.
  **Note:Hey! Would you like to share the story of the movie ஸ்பைடர் மேன்: பார் ப்ரம் ஹோம் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).