சுட்டுப்பிடிக்க உத்தரவு இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் விக்ராந்த், சுசீந்திரன், மிஸ்கின், அதுல்யா ரவி நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராம் மோகன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
கதை
ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ராந்தின் குழந்தையை காப்பாற்ற ஒரு மிகப்பெரிய தொகை தேவைப்படுகிறது. நடுத்தர குடும்பத்தில் வாழும் விக்ராந்த் பணத்தை பெறுவதற்கு வேறு வழியின்றி ஒரு வங்கியை தனது நண்பர்களுடன் கொள்ளையடிக்க முடிவு செய்கிறார்.
இயக்குனர் சுசீந்திரன் குழுவுடன் சேர்ந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டு, ஒரு வங்கி அலுவலகத்தை தாக்கி பணத்தை கொள்ளையடிக்கிறார். பணத்தை கொள்ளையடித்த இவர் ஒரு வாகனத்தில் ஏறி தப்பிச்செல்கிறார். அப்போது இவர்களை போலீஸ் தடுக்கிறது. போலீஸிடம் இருந்து தப்பி ஒரு கூவம் இடத்திற்குள் செல்லும் இவரது வாகனம் விபத்துக்குள்ளாகிறது.
அந்த கூவத்தை சுற்றிவளைக்கின்றனர் போலீஸ் அதிகாரிகள். அந்த இடத்திலிருந்து விக்ராந்த் மற்றும் சுசீந்திரனின் குழு தப்பித்தார்களா? இவர்களை தடுக்க சுட்டு பிடிக்க உத்தரவு என்னும் திட்டத்தை கொண்டுவருகிறார் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் இயக்குனர் மிஸ்கின். இறுதியில் நடந்தது என்ன என்பதே படத்தின் கதை.