X
தமிழ் » திரைப்படங்கள் » சுட்டுப்பிடிக்க உத்தரவு
சுட்டுப்பிடிக்க உத்தரவு

சுட்டுப்பிடிக்க உத்தரவு

Action | Crime | 14 Jun 2019 | U | 139 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

சுட்டுப்பிடிக்க உத்தரவு கதை

சுட்டுப்பிடிக்க உத்தரவு இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் விக்ராந்த், சுசீந்திரன், மிஸ்கின், அதுல்யா ரவி நடித்துள்ள த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் ராம் மோகன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய்  இசையமைத்துள்ளார். கதை  ஒரு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ராந்தின் குழந்தையை காப்பாற்ற ஒரு மிகப்பெரிய தொகை தேவைப்படுகிறது. நடுத்தர குடும்பத்தில் வாழும் விக்ராந்த் பணத்தை பெறுவதற்கு வேறு வழியின்றி ஒரு வங்கியை தனது நண்பர்களுடன் கொள்ளையடிக்க முடிவு செய்கிறார். இயக்குனர் சுசீந்திரன் குழுவுடன் சேர்ந்து ஒரு வங்கியை கொள்ளையடிக்க திட்டமிட்டு, ஒரு வங்கி அலுவலகத்தை தாக்கி பணத்தை கொள்ளையடிக்கிறார். பணத்தை கொள்ளையடித்த இவர் ஒரு வாகனத்தில் ஏறி தப்பிச்செல்கிறார். அப்போது இவர்களை போலீஸ் தடுக்கிறது. போலீஸிடம் இருந்து தப்பி ஒரு கூவம் இடத்திற்குள் செல்லும் இவரது வாகனம் விபத்துக்குள்ளாகிறது. அந்த கூவத்தை சுற்றிவளைக்கின்றனர் போலீஸ் அதிகாரிகள். அந்த இடத்திலிருந்து விக்ராந்த் மற்றும் சுசீந்திரனின் குழு தப்பித்தார்களா? இவர்களை தடுக்க சுட்டு பிடிக்க உத்தரவு என்னும் திட்டத்தை கொண்டுவருகிறார் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் இயக்குனர் மிஸ்கின். இறுதியில் நடந்தது என்ன என்பதே படத்தின் கதை.
Read More

சுட்டுப்பிடிக்க உத்தரவு நடிகர்கள் & படக்குழுவினர்

சுட்டுப்பிடிக்க உத்தரவு அணியின் தகவல்

இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பா
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை ஜேக்ஸ் பிஜாய்
தயாரிப்பாளர் ராம் மோகன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
படத்தில் இரண்டு பெரிய இயக்குனர்கள் நடித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் நடிப்பதுடன் தங்களுடைய கடமையை முடித்துக்கொண்டிருக்கிறார்கள். மிக்‌ஷின் ஓவராக நடித்து நம்மை டார்ச்சர் செய்திருக்கிறார். சுசீந்திரனுக்கு அந்த கதாபாத்திரம் பொருந்தவே இல்லை. விக்ராந்த் வழக்கம்போல் சிறப்பாகவே நடித்து இருக்கிறார். மகளிடம் உணர்வுபூர்வமாக சைகை மொழியில் பேசும்போதும், சண்டைக்காட்சிகளிலும் தனது உடல்மொழியால் கவர்கிறார். அதுல்யா, ரித்தீஷ் இருவரும் காமெடி என்ற பெயரில் ஏதேதோ செய்து கடுப்பேற்றுகிறார்கள். படத்தின் ஒரே ஆறுதல் பேபி மானஸ்வி தான். இமைக்கா நொடிகளில் வாயாடியாக வந்து கவர்ந்தவர், இந்த படத்தில் சைகை மொழியில் பேசி நெகிழச் செய்கிறார். சிறப்பான நடிப்பு மானஸ்வி.

சுட்டுப்பிடிக்க உத்தரவு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சுட்டுப்பிடிக்க உத்தரவு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+