உள்குத்து இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், நந்திதா, பாலா சரவணன், ராஜேந்திரன், செஃப் தாமு மற்றும் பலர் நடித்துள்ள நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜஸ்டின் பிரபாகரன்.
கதை :
கந்துவட்டி ப்ளஸ் ரௌடியிசத்தை ஃபுல் டைம் தொழிலாகவும் பார்ட் டைமாக படகு செய்யும் வேலையும் பார்க்கும் லோக்கல் தாதா சரத் லோஹிதஸ்வா. அவரது மகனாக திலீப் சுப்பராயன். ஸ்டன்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி இருக்கிறார். கோவம் வந்தால், உடன் இருப்பவர்களையே கழுத்தை நெரித்துக் கொல்லும் தாதா அப்பா சரத், அவருக்குத் தப்பாமல் பிறந்த மகன் திலீப் இருவரும் தினேஷ் வாழ்க்கையில் எப்படி குறுக்கிடுகிறார்கள்... அவர்களுக்கு தினேஷ் திருப்பிக் கொடுத்தது என்ன என்பதுதான் கதை.