நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை திரைப்படம். இப்படத்தினை பிரபல தமிழ் திரைப்பட முன்னணி தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தனது 'லைக்கா புரொடக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
நகைச்சுவை கலாட்டாவில் தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே எடிட்டிங் செய்துள்ளார்.
இப்படம் 2022 டிசம்பர் 09ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது, இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ரிலீஸ்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தினை ஓடிடியில் ஒளிபரப்புவதற்கான ஸ்ட்ரீமிங் உரிமையை 'நெட்ப்ளிக்ஸ்' நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கதை
திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாமல் இருக்கும் ஒரு தம்பதிக்கு ஒரு சித்தர் வரமாக ஒரு நாய் குட்டியை கொடுக்கிறார். அந்த நாய் வீட்டில் இருந்தால் செல்வம் பெரும் கஷ்டங்கள் நீங்கும் என்று சித்தர் சொல்ல, அந்த தம்பதிகளும் நாய் குட்டியை வளர்த்து வருகின்றனர்.
அந்த நாயின் மகிமை அறிந்த வீட்டு வெள்ளைக்காரன், நாயை கடத்தி செல்கிறான். பல ஆண்டுகள் கழித்து ஒரு பெரிய பணக்காரனாக உள்ளான், அந்த வீட்டு வேலைக்காரன்.
பின்னர் நாயின் ராசியால் பணம் வரும் என்பதை அறியும் வடிவேலு, அந்த நாயை தேடி அலைகிறார், பின் என்ன ஆனது. அந்த அதிசிய நாய் அவருக்கு கிடைத்ததா இல்லையா என்பதே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் கதை.