வரலாறு முக்கியம் இயக்குனர் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா, காஷ்மீரா பர்தேஷி, பிரக்யா நாக்ரா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆர்.வி. சௌத்ரி தயாரிக்க, இசையமைப்பாளர் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும் வண்ணத்தில் நகைச்சுவை & காதல் படமாக உருவாகியுள்ள, வரலாறு முக்கியம் படத்தினை ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் என்.பி. ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்துள்ளார்.
2022, டிசம்பர் 09ல் இப்படம் திரைக்கு வந்துள்ளது, இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு/ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
வரலாறு முக்கியம் திரைப்படத்தின் கதை
நடிகர் ஜீவா யூடியூபராக வருகிறார். கோயம்புத்தூரில் அப்பா கேஸ் ரவிக்குமார் மற்றும் அம்மா சரண்யா பொன்வண்ணனுடன் வசித்து வருகிறார் ஜீவா. படித்து முடித்துவிட்டு வேலை வெட்டி இல்லாததால் யூடியூப் சேனலை தொடங்குகிறார். இவர் ஏற்கனவே ஆரம்பித்த இரண்டு யூடியூப் சேனல்களும் கஷ்டமானதால், மூன்றாவதாக ஒரு சேனலை தொடங்கி கண்டென்டுக்காக அலைந்து திரிகிறார்.
இந்த நேரத்தில் தான், கார்த்தி (ஜீவா) வீட்டிற்கு பக்கத்தில் ஒரு மலையாள குடும்பம் குடி வருகிறது. அதில் அக்கா யமுனாவை (காஷ்மிரா) ஜீவா காதலிக்கிறார், தங்கை பிரக்யா ஜீவாவை காதலிக்கிறார். அதன் பிறகு யார் யாரை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது தான் வரலாறு முக்கியம் திரைப்படத்தின் மொத்தக்கதை.