யாதுமாகி நின்றாய் கதை

  யாதுமாகி நின்றாய் நடிகை காயத்ரி ரகுராம் இயக்கத்தில் அவரது முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள குடும்பத்திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் கிரிஜா ரகுராம் தயாரிக்க, தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்களான ஆச்சு ராஜாமணி மற்றும் அஸ்வின் விநாயகமூர்த்தி இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

  நடன ஆசிரியர் மற்றும் நடிகையாக தமிழ் திரையில் பணியாற்றி வந்த காயத்திரி ரகுராம் இப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரைத்துறையில் தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.

  யாதுமாகி நின்றாய் திரைப்படத்தின் கதைக்கரு

  இப்படமானது சினிமாவில் ஒரு நடனமாடும் ஒரு பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சில உண்மைகளை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளதாக இப்படத்தின் இயக்குனரும், நடிகையுமான காயத்திரி ரகுராம் கூறியுள்ளனர்.

  யாதுமாகி நின்றாய் படத்தின் கதை

  தாமரை (காயத்திரி ரகுராம்), சினிமாவில் ஒரு நடனம் ஆடும் பெண்ணாக பணியாற்றி வருகிறார். அப்போது இவருக்கு பல நெருக்கடிகள் உள்ளது. இருப்பினும் தனது திறமையால் ஒரு நல்ல இடத்திற்கு வந்து புகழ் பெற்றுள்ள இவர், ஒரு பெரிய திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பினை பெறுகிறார்.

  அச்சமயம் அப்படத்தில் பணியாற்றும் ஒரு முக்கிய பிரபலம் அவரை படுக்கைக்கு அழைக்கிறார். இதனை நிராகரிக்கும் தாமரை, அப்படத்தில் இருந்து இவர் நீக்கப்படுகிறார். பின்னர் அடுத்தடுத்து இவர் நடிக்கவிருக்கும் பல படங்களில் இருந்து இவர் வெளியேற்றப்படுகிறார்.

  பின் வெளிநாட்டிற்கு ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக செல்லும் இவர், அங்கும் இதே பிரச்சனையை சந்திக்கிறார். பின் தனது காதலரை திருமணம் செய்து கொண்டு தமிழகத்தில் வாழ தொடங்குகிறார்.

  திரைத்துறை வாய்ப்பிற்காக இவர் நடித்துள்ள ஒரு திரைப்படத்தின் கவர்ச்சியான காட்சியினை பார்க்கும் இவரது கணவர், குழந்தையை தன்னுடன் வைத்துக்கொண்டு இவரை வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். பின் என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கதை.

  **Note:Hey! Would you like to share the story of the movie யாதுமாகி நின்றாய் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).