யசோதா இயக்குனர் ஹரி & ஹரிஷ் இயக்கத்தில் சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், முரளி சர்மா என பலர் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம். இப்படத்திற்கு இசையமைப்பாளர் மணிஷர்மா இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் 2022 நவம்பர் 11ல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்பட்டு பின் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.
யசோதா திரைப்படத்தின் கதை
சாதாரண குடும்பத்தை சேர்ந்த சமந்தா தனது தங்கைக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால், வாடகைத்தாயாக மாறுகிறார். சமந்தாவை லேப் ஒன்ற ஒரு செட்டப்பில் அடைத்து வைக்க, அங்கே இவரை போல பல பெண்கள் வாடகைத்தாயாக உள்ளனர். வரலக்ஷ்மி சரத்குமார் நடத்தும் அந்த க்ளினிக்கில் சட்ட விரோதமாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் வாடகைத்தாயாக வரும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக போராடும் சக்தியாக உருவெடுக்கும் சமந்தா அங்கிருத்து தப்பித்தாரா? மற்ற பெண்களை காப்பாற்றினாரா? என்பது தான் யசோதா படத்தின் கதை.