twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமெரிக்கா போல் இங்கும் சினிமாவில் பங்குமுறை வேண்டும்-இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

    |

    சென்னை: அமெரிக்காவில் இருப்பது போல நம் இந்திய திரையுலகிலும் வசூலில் பங்கு முறை வேண்டும். அங்கு வெளியாகும் அனைத்து படங்களும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு கொண்டு அதிக வசூலை ஈட்டுகின்றன. அந்த முறை இங்கேயும் முறைப்படுத்தப்பட வேண்டும் என்று இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசினார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஆர்.வி.உதயகுமார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக் போன்ற பல ஹீரோக்களை இயக்கியுள்ளார்.

    The U.S method should be formalize here-R.V.Udayakumar

    1990களில் வெற்றி நடை போட்ட சின்னக்கவுண்டர், எஜமான், கிழக்கு வாசல், சிங்காரவேலன், பொன்னுமணி போன்ற படங்கள் இவரது வெற்றிப்படியில் நீங்கா இடம் பிடித்தவை. இன்று முன்னணி இயக்குனர்களாக இருக்கும் தரணி, ராதா மோகன் ஆகியோர் இவரிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தத்தக்கது.

    ராயல் பிலிம் பேக்டரி சார்பில், வி.இளங்கோவன் தயாரிப்பில் தண்டகன் எனும் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார் கே.மகேந்திரன். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

    இந்த விழாவில் ஆர்.வி.உதயகுமார், ஆர்.பி. பாலா, கதாநாயகன் அஸ்வின், சனம் ஷெட்டி, ஜாக்குவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.வி.உதயகுமார், தமிழ் திரையுலகில் இருக்கும் பல பிரச்சனைகள் குறித்து பேசினார். திரையுலகை எப்படி மேம்படுத்த வேண்டும் என்று தனது கருத்தினை தெரிவித்தார். சினிமா ஒரு அருமையான தொழில் மட்டுமின்றி ஒரு அழகிய குடும்பம். இங்கு அன்பும் பாசமும் நிறைந்திருக்கிறது ஆனால் அதை யாரும் எடுத்துக் கொள்வதில்லை என்றார்.

    மேலும் அவர் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை குறிப்பிட்டு பேசி அனைவரையும் கண்கலங்க வைத்தார். அவரது இயக்கத்தில் வெளியான, பொன்னுமணி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை சவுந்தர்யா. அவர் ஆர்.வி.உதயகுமார் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டவர். எப்போதும் அவரை அண்ணா என்றே அழைப்பார். அன்று முதல் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் சவுந்தர்யாவிற்கு அண்ணனாகவே இருந்ததாக தெரிவித்தார்.

    சௌந்தர்யாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல பிரச்சனைகளையும் ஆர்.வி.உதயகுமாரே முன் நின்று பஞ்சாயத்து செய்து வைத்தாராம். அவரின் இரண்டாவது படமான சிரஞ்சீவி நடித்த படத்திலும் நடிக்க சிபாரிசு செய்தது இயக்குனர் தான்.

    சந்திரமுகி படத்தின் கன்னட ரீமேக்கில் நடித்த போது, தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இதுவே அவர் நடிக்கும் கடைசி படம் என்றும் ஆர்.வி.உதயகுமார் மற்றும் அவரது மனைவியிடமும் சவுந்தர்யா கூறியிருக்கிறார். அடுத்த நாள் அவருக்கு ஏற்பட்ட திடீர் ஹெலிகாப்டர் விபத்தை பற்றி கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இப்படி அன்பும் பாசமும் திரையுலகில் நிறைந்துள்ளது ஆனால் அதை யாரும் புரிந்து கொள்வதில்லை என்று உணர்ச்சிவசப்பட்டு கூறினார்.

    பிறகு படங்கள் எடுப்பதிலும், வெளியிடுவதிலும் எவ்வளவு சிரமம் இருக்கிறது. வெளியிட்டாலும் அவை அனைத்தும் வசூலில் அடிபடுகின்றன. எம்.ஜி.ஆர், கலைஞர், அம்மா போன்ற பல தலைவர்கள் இருந்த துறை இது. ஆனால் இன்று பல சிரமங்களுடன் நடத்தப்படுகிறது. சினிமா என்றும் அழியக்கூடாது. அதில் சிலவற்றை முறைப்படுத்த வேண்டும். ஒரு படத்தை உருவாக்குவதற்கு பின்னால் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பலன் பெற வேண்டும் என்றார்.

    தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவில் இருப்பது போல நம் இந்திய திரையுலகிலும் வசூலில் பங்கு முறை வேண்டும். அங்கு வெளியாகும் அனைத்து படங்களும் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டு கொண்டு அதிக வசூலை ஈட்டுகின்றன. அந்த முறை இங்கேயும் முறைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

    இங்கு ஒரு கூட்டம் சம்பாதித்துக்கொண்டே இருக்கையில் ஒரு கூட்டம் மட்டும் அனைத்தையும் இழந்து கொண்டே இருக்கிறது. திரைப்பட வர்த்தக சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர் சங்கம் என பல சங்கங்கள் இருப்பினும் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவை கொண்டுவர யாருமே முன்வரவில்லை.
    இந்த நிலை மாறினால் தான் சினிமா வளர்ச்சி பாதையில் செல்லும் என்றார்.

    ஒரு படத்தின் வெற்றி மற்றும் தோல்வி இரண்டையும் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும். திரையுலகில் அனைவரும் நட்புறவுடன் இருக்க வேண்டும். திறமைசாலிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தன் கருத்தினை பதிவுசெய்தார் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார். இவரின் கருத்துக்கு மதிப்பு கொடுக்கப்படுமா, வழிமுறைகள் முறைப்படுத்தப்படுமா, சினிமா துறையில் உள்ள பிரச்சனைகள் தீருமா, இந்த கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    Read more about: rv udayakumar
    English summary
    As in the US, our Indian film industry should have a share in the collections. All the films that are released there compete with one another and make a lot of money. The same method should be formalized here as well, said R.V.Udayakumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X