இயக்குநர் துதிவாணன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு நடித்துள்ள கொலைச் சேவல் திரைப்படம் மார்ச் 13ம் தேதி திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications
ஹார்ட் பீட் வெப்சீரிஸ் மூலம் பிரபலமான நடிகை தீபா பாலு நடித்துள்ள ‘கொலைச் சேவல் திரைப்படத்தின் பிரத்யேகமான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் துதிவாணன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு நடித்துள்ள கொலைச் சேவல் திரைப்படம் மார்ச் 13ம் தேதி திரைக்கு வருகிறது.
ஹார்ட் பீட் வெப்சீரிஸ் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தீபா பாலு. மலையாள நடிகையான இவர் தமிழில் ஏற்கனவே மாஸ்டர் மகேந்திரன் உடன் அமிகோ காரேஜ் படத்தில் நடித்துள்ளார்.
கொலைச் சேவல் படத்தில் கர்ப்பவதியாக நடித்துள்ளார் தீபா பாலு. கலையரசன் உடன் அவர் நடித்த படத்தின் காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஹார்ட் பீட் சீசன் 2 முடிவில் கோமாவுக்குச் சென்ற தீபா பாலு சீசன் 3ல் நினைவு திரும்பி வருவாரா என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது வெள்ளித்திரையிலேயே விருந்து கொடுக்க காத்திருக்கிறார்.
நிறைமாத கர்ப்பிணி ஊரில் உள்ள குல தெய்வக் கோயிலுக்குச் செல்ல அவரது 9வது மாதத்தில் ஏற்படும் விஷயங்கள் தான் படத்தின் கதைக்கரு என்பது குறிப்பிடத்தக்கது.
நிறைமாத கர்ப்பிணியாக சேலை அணிந்து அப்படியே கிராமத்து பெண்ணாக கலையரசன் உடன் ஜோடி போட்டு அமர்ந்திருக்கிறார் தீபா பாலு.