மூக்குத்தி அம்மன் 2 இந்த ஆண்டு வெளியாகி விடும் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சினாலும் நயன்தாரா யஷ் அக்காவாக நடித்துள்ள டாக்ஸிக் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications
ஷாருக்கான் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக சல்மான் கான் ஜோடியாக இந்தியில் படு பிசியாக நடித்து வரும் நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மூக்குத்தி அம்மன் 2 இந்த ஆண்டு வெளியாகி விடும் என நினைத்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சினாலும் நயன்தாரா யஷ் அக்காவாக நடித்துள்ள டாக்ஸிக் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
தமிழில் கவின் உடன் நயன்தாரா நடித்த ‘ஹாய்’ படம் எப்போது வரும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மலையாளத்தில் மம்மூட்டி, மோகன்லால் உடன் நயன்தாரா நடித்த பேட்ரியாட் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. தயாரிப்பாளராக எல்ஐகே படமும் அவருக்கு லாபத்தைக் கொடுக்கவில்லை.
ஆனால், பாலிவுட்டில் நயன்தாராவின் டைம் நல்லாவே இருக்கு. ஷாருக்கானை தொடர்ந்து தற்போது சல்மான் கான் உடன் நடித்து வருகிறார்.
செம ஃபிட்டாகவும் ஸ்லிம்மாகவும் உடல் எடையை பராமரித்து வரும் நயன்தாராவின் அழகை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.
நானும் ரவுடி தான் காதம்பரியாகவே இருக்காரே என ரசிகர்கள் வாவ் சொல்லி வருகின்றனர்.