ஜுராசிக் பார்க் தமிழ் என்ற கற்பனையில் தமிழ் நடிகர்கள் ஜிராசிக் பார்க் படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் இணையவாசி ஒருவர் உருவாக்கிய ஏ.ஐ. புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications
Jurassic Park : Tamil: 90s கிட்ஸ்களின் மிகவும் ஃபேவரைட் ஹாலிவுட் படங்களில் ஒன்று ஜுராசிக் பார்க். இந்த படத்தில் தமிழ் சினிமா நடிகர்களான ரஜினி, அஜித், விஜய், நயன் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவாக்கப்பட்ட ஏ.ஐ. புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜுராசிக் பார்க் தமிழ் என்ற கற்பனையில் தமிழ் நடிகர்கள் ஜிராசிக் பார்க் படத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் இணையவாசி ஒருவர் உருவாக்கிய ஏ.ஐ. புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதில் நயன்தாரா டாக்டர் எல்லி சாட்லர் கதாபாத்திரத்தில் நடித்தால் எப்படி இருக்கும் என்று உருவாக்கி உள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நயன் கச்சிதமாக பொருந்தியுள்ளார் என்று கூறும் அளவுக்கு ஏ.ஐ புகைப்படங்கள் உள்ளன.
டாக்டர் இயான் மால்கம் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடித்தால் சிறப்பாக இருக்கும் போலயே என்ற எண்ணத்தை இந்த ஏ.ஐ. புகைப்படங்கள் உருவாக்குகிறது.
டென்னிஸ் நெட்ரி கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் உருவாக்கப்பட்ட ஏ.ஐ புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஜான் ஹாமண்ட் கதாபாத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிக்குத்தான் கச்சிதமாக பொருந்தும் என்ற உணர்வை இந்த ஏ.ஐ. புகைப்படங்கள் உருவாக்குகிறது.
அதேபோல் நடிகர் அஜித்குமார் ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு என்பது போல உள்ளது அந்த ஏ.ஐ. புகைப்படங்கள்.