twitter
    X
    Home சினி தரவரிசை

    நாவல் கதைகளை அடிப்படையாகக் கொண்ட எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள்

    Author Sakthi Harinath | Updated: Saturday, November 5, 2022, 03:30 PM [IST]

    நாவல் கதைகளை அடிப்படையாகக் கொண்ட எடுக்கப்பட்ட பிரபல தமிழ் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் நாவல் புத்தக கதைகளை கதைக்கருவாக கொண்டு உருவான படங்கள் மற்றும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபல முன்னணி நடிகர்களின் வெற்றி திரைப்படங்கள் மட்டுமே இங்கு உள்ளது.

    cover image
    உதிரிப்பூக்கள்

    உதிரிப்பூக்கள்

    1

    இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படமானது, புதுமைப்பித்தன் எழுதிய ‘சிற்றன்னை’ நாவல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாகும். புதுமைப்பித்தனின் எழுதிய எத்தனையோ புகழ்பெற்ற கதைகள் இருக்கையில் எப்படி ‘சிற்றன்னை’யைப் படமாக்க வேண்டும் என்று மகேந்திரன் தீர்மானித்தார் என்பது இன்றும் வியப்பாகவே உள்ளது. மிகவும் சுவாரஸ்யமாகும் ஜனரஞ்சகமாக உள்ள இந்த கதையினை மிகவும் எதார்த்தமான திரைக்கதையில் இயக்கி வெற்றி பெற்றுள்ளார் இப்படத்தின் இயக்குனர் மஹேந்திரன்.

    முள்ளும் மலரும்

    முள்ளும் மலரும்

    2

    1967 ஆம் ஆண்டு கல்கி இதழின் வெள்ளி விழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல் முள்ளும் மலரும். இந்த நாவலை கல்கி இதழில் தொடர் கதை எழுத்தாளர் உமாசந்திரன் எழுதியது ஆகும். 1967-ஆம் ஆண்டு வெளியான இந்த நாவலை அடிப்படையாக கொண்டு 1978-ஆம் ஆண்டு இயக்குனர் மஹேந்திரன் நடிகர் ரஜினிகாந்த் முன்னனி நாயகனாக கொண்டு இப்படத்தினை இயக்கியுள்ளார்.

    சொல்ல மறந்த கதை

    சொல்ல மறந்த கதை

    3

    எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் என்ற புத்தகத்தினை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படம் தான் "சொல்ல மறந்த கதை". இப்படத்தினை இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கியுள்ளார். சேரன், நடராஜன், ஜனகராஜ் என தமிழ் திரைஜாம்பவான்கள் பலர் நடிப்பில் இப்படம் உருவாகி நல்ல விமர்சனங்கள் பெற்று பிரபலமாகின.

    ஒன்பது ரூபாய் நோட்டு

    ஒன்பது ரூபாய் நோட்டு

    4

    இயக்குனர் தங்கர் பச்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், "ஒன்பது ருபாய் நோட்டு" என்ற தலைப்பில் இவரால் எழுதப்பட்ட நாவல் கதை ஆகும். இப்படத்தினை இவரே இயக்கி, ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

    நான் கடவுள்

    நான் கடவுள்

    5

    எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ஏழாம் உலகம் என்ற புத்தகத்தினை அடிப்படையாக கொண்டு இயக்கப்பட்ட இப்படம், விமர்சன ரீதியாக மிக பெரிய வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தினை இயக்குனர் பாலா இயக்க ஆர்யா, பூஜா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்திய அரசு மற்றும் திரைப்பட தனியார் அமைப்புகள் இப்படத்தினை கௌரவித்து பல விருதுகளை அளித்துள்ளனர்.

     

    பரதேசி

    பரதேசி

    6

    பி.எச்.டேனியலால் எழுதப்பட்ட "எரியும் பனிக்காடு" என்ற நாவல் கதையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. இந்த கதை 38 ஆண்டுகளுக்கு முன்பு "ரெட் டி" என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. இயக்குனர் பாலா இந்த கதையினை சுவரசயமான திரைக்கதையில் இயக்கியுள்ளார். விமர்சன ரீதியாக பெரும் வெற்றி பெற்றுள்ள இப்படம், பல விருதுகளை வென்று குவித்துள்ளது.

    விசாரணை

    விசாரணை

    7

    எம். சந்திரகுமார் எழுதிய லாக்கப் என்ற புத்தகத்தின் கதையினை மையமாக கொண்டு சுவாரஸ்ய திரைக்கதை மூலம் இயக்கி வெற்றிகண்டுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். மேலும் இப்படம் ஒரு உண்மை சம்பவத்தினை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் பல விருதுகளை வென்று குவித்த இப்படம் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடப்படும் கிரிம் திரில்லர் படமாக அமைந்துள்ளது.

    எந்திரன்

    எந்திரன்

    8

    எழுத்தாளர் சுஜாதா ரங்கராஜன் 1980-களில் எழுதிய ஒரு புகழ் பெற்ற நாவல் கதை. இந்த கதையினை மையமாக கொண்டு எந்திரன் என்ற தலைப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகின.

    பூ

    பூ

    9

    எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய ஒரு சிறுகதை படிவம் உள்ள புத்தகம் தான் "வெயிலோடு போய்". சிறுவயது காதல் மற்றும் அந்த காதலுக்காக அவர்களின் முயற்சிகள் என ஒரு அழகான காதல் கதையாக இப்படம் உருவாகி தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றுள்ளது.

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

    10

    சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி என்ற ஆங்கில புத்தக நாவல் கதையினை தமிழில் சில மாற்றங்களுடன் திரைக்கதை எழுதி இயக்குன்னார் இயக்குனர் ராஜிவ் மேனன். இந்த புத்தகம் 1811-ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் எழுத்தாளர் ஜென் ஆஸ்டின் என்பவரால் எழுதப்பட்ட புத்தகம் ஆகும். இத்திரைப்படத்தில் மம்மூட்டி, அஜித் குமார், தபு, ஐஸ்வர்யா என புகழ் பெற்ற பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

     

    அந்நியன்

    அந்நியன்

    11

    டெல் மீ யூர்ஸ் ட்ரீம்ஸ் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள ஒரு ஆங்கில புத்தக கதையின் தமிழ் படிவம் தான் அந்நியன். இப்படத்தினை மிக சுவாரஸ்யமான திரைக்கதையில் எழுதி தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளார் இயக்குனர் ஷங்கர். இப்படத்தில் அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த பல விஷயங்களை மக்களுக்கு எளிதாக புரியும் படி எடுத்துரைத்து, விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக இப்படம் வெற்றி பெற்றுள்ளது.

    முதல்வன்

    முதல்வன்

    12

    பதவிக்காக - எழுத்தாளர் சுஜாதா எழுதிய அரசியல் கதை. இந்த நாவல் கதையினை அடிப்படையாக கொண்டு இயக்குனர் ஷங்கர் "முதல்வன்" என்ற திரைப்படத்தினை இயக்கியுள்ளார். மிகவும் ஜனரஞ்சகமான திரைக்கதையில் இப்படம் உருவாகி பட்டி தொட்டி என தமிழகத்தில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள படமாகும். இந்த புத்தகம் அரசியல் சூதாட்டம் பற்றி எழுதப்பட்ட சிறந்த நாடக கதை ஆகும்.

    ஆளவந்தான்

    ஆளவந்தான்

    13

    1984ஆம் ஆண்டு கமல் ஹாசன் எழுதிய தாயம் என்ற புத்தகத்தின் கதையினை கருவாக கொண்டு இயக்கப்பட்ட திரைப்படம் - ஆளவந்தான். இப்படம் குற்றம் சார்ந்த ஒரு திரில்லர் படமாக அமைந்து தமிழ் ரசிகர்களை கவர்ந்துள்ளது. விமர்சன ரீதியா பெரும் வரவேற்பை பெற்ற இப்படம், பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

    இறைவி

    இறைவி

    14

    எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஜன்னல் மலர் என்ற கதையின் ஒரு அங்கம் தான் இறைவி திரைப்படம். இறைவி கதையில் உள்ள நடிகர் விஜய் சேதுபதி வாழ்க்கை இந்த ஜன்னல் மலர் கதையாகும். சிறையில் இருந்து மீளும் நாயகன் தனது குழந்தை மற்றும் மனைவியின் அன்பிற்காக அலைவதே இந்த கதை.

    சைத்தான்

    சைத்தான்

    15

    ஆ..! என்ற எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல் கதை அடிப்படியாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம்தான் சைத்தான். இப்படம் நடிகர் விஜய் ஆன்டனி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள திரைப்படம். இக்காலத்திற்கேற்ப சில மாற்றங்களுடன் இந்த் கதையினை வடிவமைத்துள்ளனர் படக்குழுவினர். 

    அசுரன்

    அசுரன்

    16

    வெக்கை - எழுத்தாளர் பூமணி எழுதிய ஒரு அட்டகாசமான புத்தகம். இந்த கதையின் கரு மற்றும் அடிப்படையான சில நுணுக்கங்களை பற்றி நன்கு அறிந்த வெற்றிமாறன், இந்த கதையினை தமிழ் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து இப்படத்தினை உருவாக்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். இப்படம் வசூல் மற்றும் விமர்சம் ரீதியாக மிக பெரிய புகழினை பெற்றுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X