X
தமிழ் » திரைப்படங்கள் » அன்னபூரணி
அன்னபூரணி

அன்னபூரணி

Drama | Family | 01 Dec 2023 | U | 146 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

அன்னபூரணி கதை

அன்னபூரணி - இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆர் ரவீந்திரனின் 'ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் நடிகை நயன்தாரா திரைவாழ்வில் அவர் நடிக்கும் 75 வது படமாகும். இப்படத்தில் இவருடன் இணைந்து ஜெய், சத்யராஜ், ரேணுகா, அச்சுயுத் குமார் என பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரவீன் அந்தோணி எடிட்டிங் செய்துள்ளார். அன்னபூரணி திரைப்படம், 2023 டிசம்பர் 01ல் உலகமெங்கும் திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ' யு ' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படத்தினை 'ஜீ ஸ்டுடியோஸ்', 'நாட் எஸ் ஸ்டுடியோஸ்' மற்றும் 'ட்ரிடென்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்து தற்போது ட்ரிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் விநியோகம் செய்துள்ளது. அன்னபூரணி திரைப்படத்தின் படக்குழு & திரைநட்சத்திரங்கள் அன்னபூரணி திரைப்படத்தின் டீசர், டிரைலர் & பாடல் வீடியோக்கள் அன்னபூரணி திரைப்படத்தின் கதை கதைக்கரு: ஒரு பிராமண குடும்பத்தில் பிறக்கும் நயன்தாரா, சமையல் கலையில் அதிக ஆர்வம் கொண்டு வளர்கிறார். இவர் தனக்கு பிடித்த சமையல் தொழிலை செய்தாரா இல்லையா என்பதே இப்படத்தின் கதை. கதை : ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறக்கிறார், நயன்தாரா. சிறு வயதில் இருந்தே இவருக்கு சமையல் கலையின் மீது அதிக ஆர்வம் ஏற்படுகிறது. ஒரு பெரிய சமையல் வல்லுனராக ஆக வேண்டும் என்ற கனவோடு வளரும் நயன்தாரா, ஒரு கட்டத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்ததால் சமையல் கலையில் பணியாற்ற முடியாது என்பதை அறிகிறார். ஏனெனில் சமையல் தொழில் செய்பவர்கள் சைவம் மற்றும் அசைவம் என பல உணவுகளை சமைக்க நேரிடும் என்பது தான். நயன்தாராவின் தந்தை அச்யுத் குமார் ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருபவர். இதனால் நயன்தாராவின் சமயல் வல்லுனராகும் கனவுக்கு பெரிய தடங்கல் ஏற்படுகிறது. நயன்தாரா தனக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்து, MBA படிப்பதாக சொல்லி, ஒரு கேட்டரிங் கல்லூரியில் சேர்கிறார். பின் ரகசியமாக ஒரு சமையல் போட்டியில் கலந்து கொள்கிறார்.  இறுதியில் நயன்தாரா பல தடைகளை தாண்டி தனது கனவை சாதித்தாரா இல்லையா என்பதே அன்னபூரணி திரைப்படத்தின் கதை. அன்னபூரணி திரைப்படம் பற்றிய தகவல்கள் ' அன்னபூரணி ' நடிகை நயன்தாராவின் திரைப்பயணத்தில் இவர் நடிக்கும் 75வது திரைப்படம். இப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வண்ணத்தில் உருவாக்கியுள்ளனர், படக்குழுவினர். இப்படத்தின் படப்பிடிப்பு 2023 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டு, 2023 செப்டம்பர் மாதம் முடிவுக்கு வந்துள்ளது. பின்னர் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நிறைவு பெற்று இப்படம் 2023 டிசம்பர் 1ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. அட்லீ இயக்கிய ராஜா ராணி திரைப்படத்திற்கு பின், அன்னபூரணி திரைப்படத்தில் ஜெய் - நயன்தாரா - சத்யராஜ் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த ஆண்டு 2023ல் நடிகை நயன்தாரா திரைவாழ்வில் ஜவான், அன்னபூரணி என பல முக்கிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. 
Read More

அன்னபூரணி நடிகர்கள் & படக்குழுவினர்

அன்னபூரணி அணியின் தகவல்

இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா
ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் , சத்யன் சூர்யன்
தொகுப்பாளர் பிரவீன் ஆண்டனி
இசை எஸ் தமன்
தயாரிப்பாளர் ஆர் ரவீந்திரன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

அன்னபூரணி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஒரு ஆச்சாரமான பிராமண குடும்பத்தில் பிறக்கிறார், நயன்தாரா. சிறு வயதில் இருந்தே இவருக்கு சமையல் கலையின் மீது அதிக ஆர்வம் ஏற்படுகிறது. ஒரு பெரிய சமையல் வல்லுனராக ஆக வேண்டும் என்ற கனவோடு வளரும் நயன்தாரா, ஒரு கட்டத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்ததால் சமையல் கலையில் பணியாற்ற முடியாது என்பதை அறிகிறார். ஏனெனில் சமையல் தொழில் செய்பவர்கள் சைவம் மற்றும் அசைவம் என பல உணவுகளை சமைக்க நேரிடும் என்பது தான். நயன்தாராவின் தந்தை அச்யுத் குமார் ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வருபவர். இதனால் நயன்தாராவின் சமயல் வல்லுனராகும் கனவுக்கு பெரிய தடங்கல் ஏற்படுகிறது. நயன்தாரா தனக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற முடிவெடுத்து, MBA படிப்பதாக சொல்லி, ஒரு கேட்டரிங் கல்லூரியில் சேர்கிறார். பின் ரகசியமாக ஒரு சமையல் போட்டியில் கலந்து கொள்கிறார். இறுதியில் நயன்தாரா பல தடைகளை தாண்டி தனது கனவை சாதித்தாரா இல்லையா என்பதே அன்னபூரணி திரைப்படத்தின் கதை.

அன்னபூரணி ட்ரெய்லர்

Video Thumbnail

அன்னபூரணி பாடல்கள்

Music Director: எஸ் தமன்

அன்னபூரணி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

அன்னபூரணி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+