X
தமிழ் » திரைப்படங்கள் » பலே வெள்ளையத் தேவா
பலே வெள்ளையத் தேவா

பலே வெள்ளையத் தேவா

Comedy | 23 Dec 2016 | U |
Tamil

2.5 /5 Users

1.5 /5 Filmibeat

பலே வெள்ளையத் தேவா கதை

பலே வெள்ளையத் தேவா இயக்குநர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் சசிகுமாரை கம்பெனி ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்த நகைச்சுவை திரைப்படம். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக சசி குமார், கோவை சரளா, சங்கிலி முருகன் முக்கிய கதாப்பத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இது சசிகுமார் தயாரிப்பில் வெளிவந்த ஒன்பதாவது திரைப்படமாகும். இத்திரைப்படம் தேனியில் படமாக்கப்பட்டுள்ளது.
Read More

பலே வெள்ளையத் தேவா நடிகர்கள் & படக்குழுவினர்

பலே வெள்ளையத் தேவா அணியின் தகவல்

இயக்குனர் சோலை பிரகாஷ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை தர்புகா சிவா
தயாரிப்பாளர் சசி குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

பலே வெள்ளையத் தேவா விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
சில படங்களை பார்த்த பிறகு இப்படி சில கேள்விகள் எல்லாம் எழும்... இந்த மாதிரி படங்களை எதற்காக எடுக்கிறார்கள்... அவர்கள் நோக்கம் என்ன... அந்தப் படம் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்... கதையைக் கேட்டுத்தான் எடுக்கிறார்களா.. அட்லீஸ்ட் எடுத்த பிறகு ரிலீசுக்கு முன் போட்டாவது பார்க்கிறார்களா? சசசிகுமார் நடித்து தயாரித்துள்ள பலே வெள்ளையத் தேவா இந்த மாதிரி நிறைய கேள்விகளைக் கேட்க வைத்துவிட்டது. கதை விஷயத்தில் கொஞ்சமல்ல... ஓரளவு நன்றாகவே கவனம் செலுத்தக் கூடியவரான சசிகுமார், எப்படி இப்படி ஒரு காமா சோமா ஸ்கிரிப்டை ஓகே பண்ணார் என்பதுதான் ஆச்சர்யம். படத்தின் முதல் காட்சி தொடங்கி கடைசி காட்சி வரை ஒரு இடத்தில் கூட இம்மியளவு சுவாரஸ்மும் இன்று சவசவவென நகர்கின்றன காட்சிகள். சசிகுமாருக்கு காதலும் வரவில்லை... நகைச்சுவையும் வரவில்லை. ஒரே ஒரு சண்டைக் காட்சி. அதில் மட்டும் தேறுகிறார். படத்தின் மிகப் பெரிய மைனஸ் கோவை சரளா. சசிக்கவில்லை. படம் முடிந்து வரும்போது காது வலிக்கிறது, சரளா போட்ட கூச்சலில். அதிலும் சசிகுமாரின் நண்பன் திட்டிவிட்டான் என்று கூறி சரளா வைக்கும் ஒப்பாரி கடுப்பேற்றுகிறது. நாயகியாக வரும் தான்யா சுமார்தான். சில காட்சிகளில் பார்க்கும்படி இருந்தாலும், நடிப்பு சுத்தமாக வரவில்லை. சங்கிலி முருகனைக் கூட ஒழுங்காகப் பயன்படுத்தவில்லை. அந்த இரு வில்லன்களும் காமெடிப் பீசு என்று இடைவேளைக்கு முன்பே தெரிந்துவிடுகிறது. மீதி நேரம் பூராவும் வெத்தாக வந்து போகிறார்கள். ஒளிப்பதிவு பரவாயில்லை. இசை சுத்தமாக எடுபடவில்லை. அதுவும் கிடாரியில் போட்ட மெட்டுகளையே மாற்றிப் போட்டுவிட்டார் போலிருக்கிறது இசையமைப்பாளர். சசிகுமார் கேரியரிலேயே மோசமான படத்தை இயக்கியவர் என்ற பெருமை இந்த வெள்ளையத் தேவாவை இயக்கிய சோலை ராஜேஷுக்குதான்!

பலே வெள்ளையத் தேவா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

பலே வெள்ளையத் தேவா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+