X
திரௌபதி

திரௌபதி

Drama | 28 Feb 2020 | U/A |
Tamil

2.6 /5 Users

3 /5 Filmibeat

திரௌபதி கதை

திரௌபதி இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி மற்றும் ஷீலா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் இயக்குனர் மோகன் ஜி தயாரிக்க, இசையமைப்பாளர் ஜூபின் இசையமைத்துள்ளார். சமுதாய அக்கறையுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயண் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் தேவராஜ் எஸ் எடிட்டிங் செய்துள்ளார். திரௌபதி திரைப்படத்தின் பிரத்தியேக தகவல்கள் திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி தமிழ் திரையுலகில் " பழைய வண்ணாரப்பேட்டை " திரைப்படத்தினை இயக்கி இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானவர். ஜி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான " அழகிய தமிழ் மகள் " தொடரில் நடித்து புகழ் பெற்ற ஷீலா இத்திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். திரௌபதி திரைப்படத்தின் கதைக்கரு 2013-ஆம் ஆண்டு வடசென்னையில் உள்ள ஒரு பத்தரபதிவு அலுவலகத்தில் ஒரு பெண்ணிற்கு தெரியாமல் அவரை திருமணம் செய்துள்ளதாக 3500-ற்கும் மேல் போலி சான்றிதழ் வெளியாகி பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது. அந்த சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாகவுள்ளது என படக்குழுவினர் கூறியுள்ளனர்.   திரௌபதி திரைப்படத்தின் கதை ஒரு அமைதியான கிராமத்தில் நாயகன் ருத்ர பிரபாகரன் (ரிச்சர்ட்) தனது மனைவி திரௌபதி (ஷீலா ராஜ்குமார்) உடன் வாழ்ந்து வருகிறார். அந்த கிராமத்தில் நாயகன் சிலம்பம் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த தாய் மாமனான அந்த கிராம தலைவரின் மகளை திருமணம் செய்த இவர், ஊர் தலைவருடன் சேர்ந்து கிராம மக்கள் நலனுக்காகவும், விவசாயத்திற்காகவும் போராடி வருகிறார். வெளியூர் அரசியல்வாதி அந்த கிராமத்தில் உள்ள ஒரு நிலத்தை வாங்கி கிராமத்தில் குளிர்பான கம்பெனிக்காக ஒரு பித்தலாட்டத்தில் ஈடுபடுகிறார். அதனை அறிந்த நாயகன் மற்றும் திரௌபதியின் குடும்பம் அதனை எதிர்க்கிறார்கள். இவரை சமாளிக்க முடியாத அந்த அரசியல்வாதி அந்த ஊர் தலைவரின் மகளான திரௌபதியின் தங்கைக்கும் வேறு சாதியை சேர்ந்த இளைஞருக்கும் பதிவுத் திருமணம் நடந்ததாக போலிச் சான்றிதழ் ஒன்றினை தயாரித்து அந்த கிராம தலைவருக்கு அனுப்பி வைக்கிறார். இதனை அறிந்த ஊர் தலைவர் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொல்கிறார். இன்னும் அடங்காத அந்த அரசியல்வாதி திரௌபதி மற்றும் அவளின் தங்கையை கொலை செய்து அந்த பழியை நாயகன் ரிச்சர்ட் மீது சுமத்துகிறார் அந்த அரசியல்வாதி. ஆணவக் கொலை காரணம் என நாயகன் ரிச்சர்ட்யை போலீஸ் சிறையில் அடைக்கிறது. பின்னர் ஜாமினில் வெளியே வரும் நாயகன் அந்த போலி சான்றிதழ் உருவாக்கப்பட்ட அந்த பதிவாளர் அலுவலகத்தை நோட்டமிட்டு அதற்கு அருகில் டி விற்பவராக இருக்கிறார். சென்னையில் டி விற்பவராக இருந்து கொண்டு இரண்டு பேரை கொலை செய்கிறார் நாயகன். பின் என்ன நடந்து என்பதே படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை.
Read More

திரௌபதி நடிகர்கள் & படக்குழுவினர்

திரௌபதி அணியின் தகவல்

இயக்குனர் மோகன் ஜி
ஒளிப்பதிவாளர் மனோஜ் நாராயண்
தொகுப்பாளர் தேவராஜ் எஸ்
இசை ஜுபீன்
தயாரிப்பாளர் மோகன் ஜி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

திரௌபதி விமர்சகர்களின் விமர்சனம்

சினி உலகம்
போலி பதிவு திருமண முறைகேடுகளுக்கு துணை போபவர்கள் இனி மனம் மாறினால் மகிழ்ச்சி.
சமயம் சினிமா விமர்சனம்
இரண்டாம் பாதியில் மெசேஜ் சொல்வதற்கு தான் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பிலிமிபீட்
தேவையற்ற கட்சிகளையும் வசனங்களையும் வெட்டி செதுக்கிவிட்டு அதை மட்டும் பட்டைத் தீட்டியிருந்தால் ரசித்திருக்கலாம்.

திரௌபதி ட்ரெய்லர்

Video Thumbnail

திரௌபதி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • No chances of these film again in kollywood the way of expression of miss amy cant be typed in words AMY ur my heart throb u stole my heart

×
2.6 /5 Your Rating

திரௌபதி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+