X
ஜீனியஸ்

ஜீனியஸ்

Action | Drama | 26 Oct 2018 |
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ஜீனியஸ் கதை

ஜீனியஸ் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஆடுகளம் நரேன், மீரா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த திரைப்படம். இத்திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதை :  நாயகன் தினேஷ் குமார் (ரோஷன்)பள்ளியில் படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் சிறந்த மாணவர். படிப்பு மட்டுமின்றி அனைத்துப் போட்டிகளிலும் முதல் மாணவராக வந்து பாராட்டுகளைப் பெறுகிறார். தனது மகனின் அபார அறிவாற்றலைக் கண்டு வியக்கும் அவரது தந்தை (ஆடுகளம் நரேன்), அவரை மேலும் புத்திசாலியாக்க தினேஷை எந்நேரமும் படிபடி என அழுத்தம் தருகிறார். இதனால் தனது சிறுவயது சந்தோஷங்களை இழக்கும் தினேஷ், ரோபோ போல் மாறுகிறார். இதே அழுத்தம் வேலையிலும் தொடர்கிறது. நன்றாக வேலை செய்யும் தினேஷுக்கு, அவரது முதலாளி மேலும் அழுத்தம் தந்ததால், மனப்பிறழ்வு ஏற்படுகிறது. அவருடைய அதிபுத்திசாலித்தனமே அவருக்கு எமனாகிறது. இந்தப் பிரச்சினைகளில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதே படம்.
Read More

ஜீனியஸ் நடிகர்கள் & படக்குழுவினர்

ஜீனியஸ் அணியின் தகவல்

இயக்குனர் சுசீந்திரன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை யுவன் ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ஜீனியஸ் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
ஒரு குறும்படத்துக்கான கான்செப்டை வைத்துக்கொண்டு, தனது திறமையான திரைக்கதையால் முழுநீளப்படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். வாழ்வில் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினை என்பதால், பார்வையாளர்கள் மிக எளிதாக படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. மதிப்பெண்கள் தான் முக்கியம் என்பது பல பெற்றோர்களின் மனதில் ஆழமாக புதைந்து போன கருத்து. மற்ற குழந்தைகளைவிட நமது குழந்தைகள் பின் தங்கி விடக்கூடாது என்பதே அவர்களது முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இதற்காக ஒரு அப்பா எந்த எல்லை வரையும் செல்வார் என்பதை நரேனின் கதாபாத்திரம் தெளிவாக உணர்த்துகிறது. முதல்பாதியில் நேர்கோட்டில் செல்லும் கதை, இரண்டாம் பாதியில் ஜாஸ்மின் (பிரியா லால்) கதாபாத்திரத்தின் எண்ட்ரிக்கு பிறகு வேறு ரூட் எடுத்து சினிமாத்தனமாக மாறிவிடுகிறது. அதேபோல ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் பரிவு ஏற்பட வேண்டும் என்பதற்காக நிறைய நியாயம் சொல்லியிருக்கிறார் இயக்குனர். க்ளைமாக்ஸில் குழந்தை பாட்டுடன் படத்தை முடிக்கும் தனது சென்டிமெண்ட்டை, இந்த படத்திலும் வைத்திருக்கிறார் சுசீந்திரன். அது நன்றாகவே வேலை செய்கிறது. கொஞ்ச நேரமே வந்தாலும், தனது சாந்தமான நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் ஹீரோயின் பிரியா லால். ஆடுகளம் நரேன், சிங்கம் புலி, மீரா கிருஷ்ணன் என படத்தில் நடித்த அனைவருமே தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஈரோடு மகேஷ், தாடி பாலாஜி, சிங்கமுத்து ஆகியோரை இன்னும் கொஞ்சம் பயன்படுத்தி இருக்கலாம். சிலு சிலு பாடலில் குழந்தையின் மனதை திரையில் கொண்டுவந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ். ஆனால் ஒரு சில இடங்களில் தேவையில்லாத இந்த ஹெலிகேம் ஷாட்டுகளை தவிர்த்திருக்கலாம். ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் படத்தை நறுக் என தந்ததற்காகவே எடிட்டர் தியாகுவிற்கு தனி பாராட்டுக்கள். சமுதாயத்திற்குத் தேவையான கருத்தை சரியான நேரத்தில் படமாகத் தந்ததற்காக இந்த ஜீனியஸை பாராட்டலாம். குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்லது என நாம் செய்யும் அனைத்துமே நிச்சயம் நல்ல பலனைத் தான் தருமா, என ஒவ்வொரு பெற்றோரும் ஒருமுறைக்கு பலமுறை சிந்திக்க உதவுகிறது இந்தப் படம்.

ஜீனியஸ் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ஜீனியஸ்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+