
ஹவுஸ் ஓனர் இயக்குனர் லட்சுமி இராமகிருஷ்ணன் இயக்கத்தில், நடிகர் கிஷோர், லவ்லின் நடித்துள்ள காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் கோபாலகிருஷ்ணன் இராமகிருஷ்ணன் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
2015 டிசம்பர் மாதத்தில் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தமிழகம் மறக்காது. எத்தனையோ ஆயிரம் மக்கள் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த உடைமைகளை இழந்து, பல இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. அப்படிப்பட்ட ஒரு இழப்பை பதிவு செய்யும் படம் தான் இந்த ஹவுஸ் ஓனர்.
கதை
ஓய்வு பெற்ற ராணுவ...
Read: Complete ஹவுஸ் ஓனர் கதை
-
லட்சுமி இராமகிருஷ்ணன்Director
-
கோபாலகிருஷ்ணன் இராமகிருஷ்ணன்Producer
-
ஜிப்ரான்Music Director
-
கிருஷ்ணா சேகர்Cinematogarphy
-
சி எஸ் பிரேம் குமார்Editing
-
ஆஸ்கர் விருதுகள் 2023 : சிறந்த திரைப்பட பிரிவில் தேர்வாகாத ஆர்ஆர்ஆர்!
-
ஆஸ்கர் 2023 பரிந்துரை பட்டியல் LIVE: 4 பிரிவுகளில் இந்திய படங்கள் ஆஸ்கரில் நாமினேட் ஆகி உள்ளன!
-
அறம் வெல்லும்.. ரசிகர்களின் அன்பிற்கு நன்றி சொன்ன விக்ரமன்.. வீடியோ வெளியீடு!
-
லவ் டுடே இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு விருது… இருமடங்காக உயர்ந்த சம்பளம்!
-
ஆரம்பமே தகராறு.. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்திலிருந்து வெளியேறிய பிரபலம்!
-
விக்டரி வெங்கடேஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியீடு
-
பில்மிபீட்சிறு வயது காதல், முதுமைப்பருவ மோதல் என இரண்டையும் பேலன்ஸ் செய்து காட்சியாக்கியிருக்கிறார். "கண்ணன் ஒரு கைக்குழந்தை" என ரேடியோவில் ஒலிக்கும் பாடலாகட்டும், செய்தி சேனலில் திக்கித்திக்கி ரிபோர்டிங் செய்யும் நிருபராகட்டும், அனைத்தையும் தனது படத்தின் சூழ்நிலையாக்கிறார் லட்சுமி.
குறிப்பாக, கடைசி 20 நிமிடக் காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கிறது. வீட்டுக்குள் தண்ணீர் புகும் காட்சிகளை எல்லாம் மிக தத்ரூபமாக எடுத்திருக்கிறார். இது தான் முடிவு என சொல்லாமல், சில குறியீடுகளை மட்டும் காட்டிவிட்டு, பார்வையாளர்களின் முடிவுக்கே படத்தை விட்டுவிடுகிறார் இயக்குனர்.
ஒரு நிஜ வீட்டுக்குள் கணவன், மனைவி எப்படி இருப்பார்களோ, அதை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள் ஸ்ரீரஞ்சனியும், கிஷோரும். கணவனின் முந்தைய கால அன்பை நினைப்பில் வைத்துக் கொண்டு, நிகழ்காலத்தில் அவர் உமிழும் வெறுப்பை பொறுத்துக்கொண்டு, பதிலுக்கு காதலை மட்டுமே பரிசாக தந்து, நம்மை நெகிழ வைக்கிறார் ஸ்ரீரஞ்சனி. க்ளைமாக்சில் அவர் பதறும் காட்சிகள், நம் மனதை இறுக்கமாக்கி விடுகிறது...
விமர்சனங்களை தெரிவியுங்கள்