X
தமிழ் » திரைப்படங்கள் » இறுகப்பற்று
இறுகப்பற்று

இறுகப்பற்று

Drama | Family | Romance | 06 Oct 2023 | U | 153 Mins
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

இறுகப்பற்று கதை

இறுகப்பற்று - இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு - ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ - சானியா ஐயப்பன், விதார்த் - அபர்ணாதி ஆகியோர் முக்கிய முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குடும்பம் & காதல் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு & எஸ் ஆர் பிரகாஷ் பாபு இணைந்து 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். காதல் & குடும்ப கதையில் தமிழ் பட ரசிகர்கள் குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் சுவாரஸ்யமாக திரைக்கதை வடிவமைத்து உருவாகியுள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஜே வி மணிகண்ட பாலாஜி எடிட்டிங் செய்துள்ளார். இறுகப்பற்று திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. இப்படம் 2023 அக்டோபர் 6ல் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இறுகப்பற்று திரைப்படத்தின் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இறுகப்பற்று திரைப்படத்தின் படக்குழு & திரை நட்சத்திரங்கள் தகவல்கள் இறுகப்பற்று திரைப்படத்தின் பாடல் & டீசர், டிரைலர் வீடியோக்கள் இறுகப்பற்று திரைப்படத்தின் கதை கதைக்கரு : தம்பதிகளின் கருத்துவேறுபாடு & ஒவ்வொருவருக்கான புரிதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இறுகப்பற்று திரைப்படத்தின் கதைக்கரு அமைந்துள்ளது. இதில் மூன்று ஜோடிகளின் பிரச்சனைகள் மற்றும் தம்பதிகளின் முக்கியத்துவத்தை பற்றிய கதைக்களத்தில் உருவாகியுள்ளது, இறுகப்பற்று.   கதை   மனோகர் - மித்ரா:  சைக்காட்ரிஸ்ட்டான மித்ரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் திருமணத்துக்கு பிறகு காதல் இல்லை என்றும் மனைவியை பிடிக்கவில்லை என்றும் 2 ஜோடிகள் விவாகரத்து கேட்டு வர, தன்னுடைய வீட்டிலும் சைக்காட்ரிஸ்ட்டாகவே தனது மனைவி இருக்கிறாரே என்கிற எண்ணம் தோன்ற அதுவரை பிரச்சனை இல்லாமல் சென்று கொண்டிருந்த அந்த பைத்தியக்கார டாக்டருக்கே பைத்தியம் பிடித்தால் வைத்தியம் பார்ப்பது யார்? என்பது போன்ற ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார் யுவராஜ் தயாளன் விதார்த் - அபர்ணதி : ஐடியில் வேலை பார்க்கும் ரங்கேஷ் மற்றும் பவித்ரா தம்பதியினர் திருமணம் ஆன நிலையில், பவித்ராவுக்கு குழந்தை பிறக்கிறது. குழந்தை பேற்றுக்கு பிறகு அவரது உடல் எடை அதிகரித்து குண்டாகி விடுகிறார். மேலும், அவர் பேசும் போது வாய் துர்நாற்றம் அடிக்கிறது என்கிற புகார்களுக்காக மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுக்கிறார் ரங்கேஷ்.  ஸ்ரீ - சானியா ஐயப்பன் : காதலித்து திருமணம் செய்துக் கொண்ட இளம் ஜோடிகளான அர்ஜுன் மற்றும் திவ்யா திருமணத்துக்கு பிறகு ஏற்படும் பிரஷர் காரணமாக தங்கள் காதலையே மறந்து விட்டு பிரிந்து விடும் முயற்சியில் மித்ராவை சந்திக்கின்றனர். இந்த இரு ஜோடிகளுக்கு சுமூக தீர்வை மித்ரா கண்டாரா? அல்லது தனது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிளவை சரி செய்தாரா? என்பதை உணர்ச்சி பொங்க சொல்லியிருக்கும் படம் தான் இறுகப்பற்று. 
Read More

இறுகப்பற்று நடிகர்கள் & படக்குழுவினர்

இறுகப்பற்று அணியின் தகவல்

இயக்குனர் யுவராஜ் தயாளன்
ஒளிப்பதிவாளர் கோகுல் பெனோய்
தொகுப்பாளர் ஜே வி மணிகண்ட பாலாஜி
இசை ஜஸ்டின் பிரபாகரன்
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, எஸ் ஆர் பிரகாஷ்பாபு, தங்க பிரபாகரன், பி கோபிநாத்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இறுகப்பற்று விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
ஃபீல் குட் பட வரிசையில் இறுகப்பற்றுக்கும் ஒரு இடம் உறுதி!

இறுகப்பற்று ட்ரெய்லர்

Video Thumbnail

இறுகப்பற்று திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

இறுகப்பற்று

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+