X
தமிழ் » திரைப்படங்கள் » கடிகார மனிதர்கள்
கடிகார மனிதர்கள்

கடிகார மனிதர்கள்

Drama | 03 Aug 2018 |
Tamil

2.6 /5 Users

2.5 /5 Filmibeat

கடிகார மனிதர்கள் கதை

கடிகார மனிதர்கள் இயக்குனர் வைகறை பாலன் இயக்கத்தில் கிஷோர், லதா ராவ், கருணாகரன் மற்றும் பலர் நடித்த குடும்ப திரைப்படம். இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார்.  கதை : சொந்த ஊரில் கடன்பட்டு வாழ வழியில்லாமல் பிழைப்பு தேடி சென்னை வரும் கிஷோர், கடைகளுக்கு ரொட்டி சப்ளை செய்யும் வேலை பார்க்கிறார். மனைவி லதா ராவ், இரு மகன்கள், ஒரு மகள் என மூன்று பிள்ளைகளுடன் மிகுந்த சிரமங்களுக்கு இடையேயும் வாழ்க்கையை நடத்தும் கிஷோருக்கு, ஒருநாள் இரவு திடீரென குடியிருந்த வீட்டை காலி செய்யும் நிலை ஏற்படுகிறது. மினி லாரியில் சாமான் செட்டுகளை அள்ளிப்போட்டுக்கொண்டு குடும்பத்துடன் சென்னையின் சந்து பொந்துகளில் வீடு தேடுகிறார். ஆனால் வீடு கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. ஒரு வழியாக புரோக்கர் ஒருவர் மூலமாக கிஷோருக்கு வீடு கிடைத்தாலும், ஒரு பிள்ளையை மறைத்து வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஹவுஸ் ஓனருக்கு தெரியாமல் எப்படி அவர் ஒரு பிள்ளையை மறைத்து வாழ்க்கை நடத்துகிறார் என்பதே கதை.
Read More

கடிகார மனிதர்கள் நடிகர்கள் & படக்குழுவினர்

கடிகார மனிதர்கள் அணியின் தகவல்

இயக்குனர் வைகறை பாலன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சாம் சி எஸ்
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கடிகார மனிதர்கள் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
சென்னையில் நாம் அன்றாடம் பார்க்கும் நம் சக மனிதர்களில் ஒருவர் தான் இந்த படத்தின் நாயகன் மாறன் (கிஷோர்). 'என்னை தவிர வேறு யாரால் இந்த பாத்திரத்தை இவ்வளவு எதார்த்தமாக நடித்துவிட முடியும்' என மார்த்தட்டிக்கொள்ளும் அளவுக்கு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். மினி லாரியில் குடும்பத்துடன் வீடு தேடுவதாகட்டும், 'டேய் கவி எங்கடா போன' என கதறுவதாகட்டும்... வீட்டை மாற்றச் சொல்லும் மனைவியின் தன் இயலாமையை வெளிபடுத்தி மடியில் சாய்ந்து அழுவதாகட்டும்... ஒரு எதார்த்த மனிதனின் முகத்தை நம்முன்னே கொண்டுவந்துவிடுகிறார். கிஷோரின் மனைவியாக வரும் லதா ராவ், நடுத்தர குடும்பத் தலைவியை அச்சுஅசலாக திரையில் கொண்டு வந்திருக்கிறார். கணவன் சம்பாத்தியம் போதவில்லை என்ற நிலையில், தன்னால் முடிந்த அளவிற்கு வீட்டிலேயே அமர்ந்து பூக்கட்டி விற்பது என நம் குடும்ப பெண்களின் பங்களிப்பை யதார்த்தமாக வெளிபடுத்தியிருக்கிறார். கருணாகரன், பாலாசிங், பிரதீப் ஜோஸ், சிசர் மனோகர் என படத்தில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். அவரவரின் பாத்திரங்களை சரியாக செய்திருக்கிறார்கள். பிரதீப் ஜோசின் நடிப்பு அப்பட்டமாக தெரிகிறது. இவர் தயாரிப்பாளராக தான் இருக்க வேண்டும் என ரசிகர்களே முடிவு செய்துவிடுகிறார்கள். அதேபோல ஒருவன் சொந்த வீடு வாங்க வேண்டும் என நினைப்பது அவ்வளவு தவறா... ஏன் அந்த நெகட்டிவ் க்ளைமாக்ஸ். அதுவும் இந்த சைக்கிள் பந்தயம் எல்லாம் தேவையில்லாத திணிப்புகள்.

கடிகார மனிதர்கள் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.6 /5 Your Rating

கடிகார மனிதர்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+