X
கசட தபற

கசட தபற

Drama | 27 Aug 2021 | 137 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

கசட தபற கதை

கசட தபற இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் சாந்தணு, சுதீப் கிருஷ்ணன், ஹரிஷ் கல்யாண், வெங்கட் பிரபு, ரெஜினா, பிரியா பவானி ஷங்கர் என தமிழ் திரைப்பட முக்கிய நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளரும் இயக்குனருமான வெங்கட் பிரபு தனது பிளாக் டிக்கெட் தயாரிப்பு நிறுவனம் வாயிலாக தயாரித்து, நேரடியாக ஆன்லைன் சோனி லைவ்  ஓடிடி தளத்தில் 2021 ஆகஸ்ட் 27ஆம் நாள் வெளியிட்டுள்ளார். இத்திரைப்படத்தில் தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களான யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், பிரேம்ஜி அமரன், சாம் சி.எஸ், சீன் ரோல்டன் ஆகியோர் இசையப்பாளராக இப்படத்திற்கு இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் தமிழ் திரைப்பட முன்னணி ஒளிப்பதிவாளரான எம்.எஸ் பிரபு, விஜய் மில்டன், பாலசுப்ரமணியெம், ஆர் டி ராஜசேகர், சக்தி சரவணன், எஸ் ஆர் கதிர் ஆகியோர் இப்படத்திற்கு பணியாற்றியுள்ளனர். இத்திரைப்படம் ஆறு இசையமைப்பாளர்களையும், ஆறு ஒளிப்பதிவாளர்களையும், ஆறு திரைப்பட தொகுப்பாளர்களையும் கொண்டு உருவாகியுள்ளது. அதிரடி, திரில்லர், காதல் என திரைத்துறையில் திரைக்கதைக்கு ஏற்பவாறு தனித்திறன் கொண்டு வெவ்வேறு கோணங்களில் பணியாற்றி வந்துள்ள இவர்கள் இத்திரைப்படத்தின் வாயிலாக இணைந்து பணியாற்றியுள்ளனர். இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. கசட தபற திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் படக்குழு தகவல்கள் கசட தபற திரைப்படத்தின் வீடியோக்கள்   கசட தபற கதைக்களம் கதைக்கரு : ஆறு வெவ்வேறு கோணங்களில் பயணிக்கும் கதை இறுதியில் ஒரே இடத்தில் இணையும் மகா சங்கமம் தான் இப்படத்தின் கதைக்கரு. முழு கதை: கவசம் சென்னையில் ஒரு தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பிரேம் ஜி பலருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். இவரின் நல்ல குணங்களை கண்டு காதலிக்கிறார் ரெஜினா. பின் இருவரும் காதலித்து வருகின்றனர். இவர்களின் காதலுக்கு ரெஜினாவின் தந்தை எதிர்ப்பு தெரிவிக்க, தன் தந்தையின் முடிவை ரெஜினா எதிர்க்கிறார். இதற்காக ரெஜினாவின் தந்தை  பிரேம்ஜி மீது திருட்டு பட்டம் கட்டி அடியாட்களை வைத்து கடத்திவிடுகிறார். சதியாடல் பிரேம் ஜி - ரெஜினா காதலை பிரிக்க ரெஜினாவின் தந்தை பிரபல தாதாவான சம்பத் உதவியை நாடுகிறார். சம்பத் காவலர்களால் தேடப்படும் ஒரு முக்கிய குற்றவாளி. பிரேம் ஜி-யின் காதலை பிரிக்க சென்ற சம்பத் எதிர்பாராமல் தனது மகன் சாந்தனுவின் காதலை பற்றி அறிகிறார்.  தனது தந்தையால் தன் காதலுக்கு வரும் ஆபத்தை எண்ணி சாந்தனு சூழ்ச்சி செய்து தனது தந்தை சம்பத்-யை கொலை செய்கிறார். தப்பாட்டம் காவலர்களாக இருக்கும் சந்தீப் மற்றும் சுப்பு இடையே பெரும் போட்டி நிகழ்கிறது. ஒரு திறமையான காவலராக இருக்கும் சந்தீப் வளர்ச்சியை கண்டு மேல் ஆய்வாளர் சுப்பு பொறாமை அடைகிறார். இதனால் சாதியை குறிப்பிட்டு சந்தீப்யை மட்டத்தட்டி வருகிறார், சுப்பு. ஒரு ஸ்பெஷல் என்கவுண்டர் பிரிவில் இருக்கும் சந்தீப்-யை ரௌடிகளின் உதவியோடு போட்டுத்தள்ள நினைக்கும் சுப்பு, சந்தீப் செய்த சூழ்ச்சியில் சுப்பு மாட்டுகிறார். சுப்புவை சந்தீப் கொலை செய்கிறார். பந்தயம் வாழ்க்கையில் பணம் சம்பாரிக்க போராடும் ஒரு துருதுருப்பான இளைஞர் ஹரிஷ் கல்யாண். தனத நண்பன் அரவிந்த் ஆகாஷ் உதவியுடன் ஹரிஷ் பல விஷயங்கள் செய்து பல கோடிகளை சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் அரவிந்த் ஆகாஷ் இறந்து விடுகிறார். இதற்காக அரவிந்த் ஆகாஷ் குடும்பத்தில் அவருக்கு பதில் மகனாக ஹரிஷ் நுழைகிறார். அறம்பற்ற கிராமத்தில் சத்துணவு சமையல் வேலை செய்யும் விஜய லட்சுமி, உடல்நலம் பாதிக்கப்பட்ட தன் மகனை காப்பாற்ற தான் வேலை செய்யும் பள்ளியில் பணத்தை திருடிக்கொண்டு சிகிச்சைக்காக சென்னை வருகிறார். சென்னையில் தன் மகனையும் காப்பாற்றி விடுகிறார். பின் தன் மகனை போன்றே பல குழந்தைகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டதை அறியும் விஜயலக்ஷ்மி, பிரேம் ஜி வேலை செய்த நிறுவனத்தில் மருந்துகளை வாங்கிக் கொண்டு செல்கிறார். ஆனால் இவர் வாங்கிய மருந்துகளை சாப்பிட்ட குழந்தைகள் இறந்து விடுகின்றனர். அக்கற பிரேம் ஜி வேலை செய்த தனியார் மெடிக்கல் குடோன் நிறுவனத்தில் வேலையை செய்யும் வெங்கட் பிரபுவை போலி மருந்துகளை விற்ற குற்றத்திற்காக காவலர்கள் கைது செய்கின்றனர். முதலில் எப்படியாவுது வெங்கட் பிரபுவை காப்பாற்றி விடுகிறான் என வாக்களிக்கும் அந்நிறுவனத்தின் முதலாளி சிவா, பின் கைவிடுகிறார். இந்த குற்றத்திற்காக வெங்கட் பிரபு-விற்கு தூக்கு தண்டனை கிடைக்கிறது. இந்த ஆறு கதைகளும் இறுதியில் இணையும் ஒரு சங்கமம் தான் இப்படத்தின் சுவாரஸ்ய திரைக்கதை. 
Read More

கசட தபற நடிகர்கள் & படக்குழுவினர்

கசட தபற விமர்சகர்களின் விமர்சனம்

சினியுலகம்
மொத்தத்தில் கசட தபற 'சிறந்த ஒன்று'
பிஹைண்ட்வுட்ஸ்
எடுத்து கொண்ட களத்திலும், கதை சொல்லிய விதத்திலும் - கசடதபற ஒரு புதிய அனுபவம்.
மாலை மலர்
மொத்தத்தில் ‘கசட தபற’ சிறப்பு.
தினமலர் சினிமா
கசடதபற - ரசிக்க வைக்கும் வல்லினம்

கசட தபற ட்ரெய்லர்

Video Thumbnail

கசட தபற திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கசட தபற

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+