X
கிடாரி

கிடாரி

Action | Drama | 02 Sep 2016 | U |
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

கிடாரி கதை

கிடாரி இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், நடிகர் சசிக்குமார் மற்றும் நிகிலா இணைந்து நடிக்கும் காதல் மற்றும் அதிரடி நகைச்சுவைத் திரைப்படம். இத்திரைப்படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நிகிலா வெற்றி வேல் திரைப்படத்தில் சசிக்குமருக்கு ஜோடியாக நடித்தவர். இத்திரைப்படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்க, சசிகுமார் தயாரிக்கின்றார். நகைச்சுவை நடிகர் தர்புகா சிவா இசையமைப்பாளராக இத்திரைப்படத்தின் மூலமே அறிமுகமாகிறார்.
Read More

கிடாரி நடிகர்கள் & படக்குழுவினர்

கிடாரி அணியின் தகவல்

இயக்குனர் பிரசாத் முருகேசன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை தர்புகா சிவா
தயாரிப்பாளர் சசி குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

கிடாரி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தென்மாவட்ட மக்களின் வாழ்க்கை முறையே துரோகம், ரத்தம் கொப்பளிக்கும் வன்முறை, அடாவடி, மூர்க்கத்தனம்தான் என்பதை வலியுறுத்துவது போல வந்திருக்கும் இன்னொரு சசிகுமார் படம் கிடாரி. ஒரு மாற்றத்துக்காகவாவது, இதெல்லாம் இல்லாத, இயல்பான வாழ்க்கையை வாழும் எளிய கிராமத்து மனிதர்களின் கதையைச் சொல்ல மாட்டார்களா என்ற ஏக்கமே வந்துவிடுகிறது கிடாரி பார்த்து முடிக்கும்போது. அப்படி ஒரு கொலவெறியுடன் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் புது இயக்குநர் பிரசாத் முருகேசன். ஏற்கெனவே காதலிக்க மறுத்ததற்கெல்லாம் அருவாளைத் தூக்கி மண்டையைப் பிளந்து கொண்டிருக்கும் சூழலில் இவ்வளவு ரத்தவெறியூட்டும் கதைகள், படங்கள் தேவையா? படத்தின் முதுகெலும்பு என்றால் அது வேல ராமமூர்த்திதான். அப்பப்பா... என்ன ஒரு அபார உடல் மொழி! கையில் வேல் கம்போடு அவர் நடந்து வரும் கம்பீரம் பிரமாதம். ராஜ்கிரணுக்குப் பிறகு இப்படி கேரக்டர் ரோலில் அசரடிப்பவர் வேல ராமமூர்த்திதான். ஹீரோயின் நிகிலாவுக்கு ஒரே ஒரு காட்சியில்தான் நடிக்க வாய்ப்பு. நெப்போலியனின் மறுவரவாக அமைந்திருக்கிறது இந்தப் படம். பத்து நிமிடங்களே வந்தாலும் கம்பீரமாக மனதில் நிற்கிறார். எஸ் ஆர் கதிரின் ஒளிப்பதிவு சாத்தூர் மற்றும் சுற்றுப் புறங்களில் நாம் நடமாடுவது போன்ற உணர்வைத் தருகிறது. தர்புகா ஷிவாவின் பாடல்களை விட, பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது. படத்தின் கதை, அதை திரைக்கதையாக்கிய விதம் இரண்டும்தான் படத்தின் பலவீனம். கொஞ்ச நாளைக்கு துரோகம், பழிக்குப் பழி, ரத்தச் சகதி க்ளைமாக்ஸ் போன்றவற்றை தூக்கி பரணில் போட்டுவிட்டு, மனிதாபிமானத்தை உயர்த்திப் பிடிக்கும், இயல்பான மனித வாழ்க்கையைச் சொல்லும், மனசை லகுவாக்கும் நகைச்சுவைப் படங்களாக எடுங்கள். மக்களின் ஆயுசு கொஞ்சமாவது கூடட்டும்!

கிடாரி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

கிடாரி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+