X
லாபம்

லாபம்

Drama | Family | Social | 09 Sep 2021 | U | 144 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

லாபம் கதை

லாபம் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை இப்படத்தின் நாயகன் விஜய் சேதுபதி மற்றும் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ளார். தமிழ் திரைப்பட ரசிகர்கள் குடும்பங்களோடு கண்டு ரசிக்கும்  வகையில் சமூக கருத்துக்கள் உள்ளடக்கிய ஒரு ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இப்படம், பல போராட்டங்களுக்கு பின்னர் 2021 செப்டம்பர் 9ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் கணேஷ் குமார் மற்றும் அஹ்மத் இணைந்து எடிட்டிங் செய்துள்ளனர். லாபம் திரைப்படத்தில் நடித்த நட்சத்திரங்கள் மற்றும் படக்குழுவினர் லாபம் திரைப்படத்தின் டிரைலர், ப்ரோமோ மற்றும் வீடியோ பாடல்கள் லாபம் திரைப்படத்தின் புகைப்படங்கள் லாபம் திரைப்படத்தின் கதை கதைக்கரு : விவசாயத்தை சார்ந்து நடக்கக்கூடிய உலகளவிய வர்த்தக அரசியலை பற்றிய படம். இதனை தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரைக்கதை வடிவமைத்து சமூக அக்கறையுடன் உணர்ச்சிப்பூர்வமான வசனங்கள் மூலம் இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ் பி ஜனநாதன். கதை பெருவயல் கிராமத்தின் விவசாயி மற்றும் சமூக அக்கறைகள் கொண்ட துடிப்பான இளைஞர் பக்கிரி (விஜய் சேதுபதி), இவர் ஒரு நாட்டின் வளர்ச்சியை விவசாயத்தின் மூலம் கொண்டு செல்ல பல திட்டங்களை வடிவமைத்துள்ளார். அதற்கு முதற்கட்டமாக மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என நினைக்கும் விஜய் சேதுபதி, மக்களின் கவனத்தை கவர நாடக கலைஞர்களின் உதவியோடு தன் திட்டத்தை செயல் படுத்துகிறார். முதலில் விஜய் சேதுபதியை தூசி என நினைக்கும் சில வியாபார நரிகள் இவரை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. பின் விஜய் சேதுபதியின் செயல்கள் மற்றும் அதனின் விளைவுகள் பொருளாதார ரீதியாக சில முன்னனி வியாபாரிகளுக்கு பெரிய நஷ்டத்தை உண்டாக்குகிறது. இனி விஜய் சேதுபதியை விட்டு வைக்க கூடாது என சில தந்திரங்கள் செய்து மக்கள் மூலமாகவே விஜய் சேதுபதியை பெருவயல் கிராமத்தில் இருந்து விரட்டுகின்றனர், வியாபாரிகள். 7 ஆண்டுகளாக பல இடங்களுக்கு சென்று பொருளாதார ரீதியாக பல விஷயங்களை கற்று தன் சொந்த ஊரான பெருவயல் கிராமத்திற்கு வருகை தரும் விஜய் சேதுபதி, பின் மீண்டும் மக்களை இணைத்து கொண்டு, விவசாயத்தை அடிப்படையாக கொண்டு தனது சொந்த லாபத்திற்காக விவசாயின் உழைப்பை திருடும் புரோக்கர் போன்ற வியாபாரிகளை எதிர்த்து போராடுவே இப்படத்தின் கதை. லாபம் திரைப்படத்தின் பிரத்யேக தகவல்கள் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2019 ஏப்ரல் 22ல் பூஜையுடன் தொடங்கியது. 2020 ஆண்டிற்குள் இப்படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு பணிகள் முடிவு பெற்ற நிலையில், கொரோன நோய் பரவல் காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. பின்னர் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததும் லாபம் படத்தின் இறுதி 10 சதவீத படப்பிடிப்பு பணிகள் 2021ஆம் ஆண்டு முற்றிலுமாக முடிக்கப்பட்டு இப்படம் 2021 செப்டம்பர் 9ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. லாபம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேரத்தில் இப்படத்தின் இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய முதல் திரைப்படமான 'இயற்கை' படத்திற்காக இவருக்கு தேசிய விருது வழங்கி இந்தியா அரசால் கௌரவ படுத்தப்பட்டுள்ளது.
Read More

லாபம் நடிகர்கள் & படக்குழுவினர்

லாபம் அணியின் தகவல்

இயக்குனர் எஸ் பி ஜனநாதன்
ஒளிப்பதிவாளர் ராம்ஜி
தொகுப்பாளர் கணேஷ் குமார் , எஸ்.பி. அஹ்மத்
இசை டி இமான்
தயாரிப்பாளர் விஜய் சேதுபதி
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

லாபம் விமர்சகர்களின் விமர்சனம்

பிஹைண்ட்வுட்ஸ்
மக்களுக்கான மாற்று அரசியலை புரிய வைக்க ஒரு புதிய முயற்சி - லாபம்.
சினிஉலகம்
மொத்தத்தில் நஷ்டத்தில் விழவில்லை லாபம்
மாலை மலர்
மொத்தத்தில் 'லாபம்' அதிக லாபம் இல்லை.
பில்மிபீட்
மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதன் எங்கு சென்றாலும் ஜனா சார் ஜனா சார் என்று மிகவும் மதிக்கும் அளவிற்கு மக்களையும், தன்னை சுற்றி உள்ளவர்களையும் ஈர்த்து உள்ளார் .பல நல்ல கமர்சியல் படங்களை கொடுத்த ஜனநாதன் இந்த லாபம் படத்தை வியாபார நோக்கத்துடன் செய்யவில்லை என்பது நன்கு புரிகிறது.

லாபம் ட்ரெய்லர்

Video Thumbnail

லாபம் பாடல்கள்

லாபம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

லாபம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+