ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் கதை

  ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் இயக்குனர் ஆறுமுககுமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், நிகாரிக்கா, ரமேஷ் திலக் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். 

  இத்திரைப்படத்தில், விஜய் சேதுபதி பழங்குடி இனத்தலைவராகவும், கெளதம் கார்த்திக் கல்லூரி மாணவராகவும் நடிக்கின்றார். இவர்களுக்கிடையில் நடக்கும் போராட்டங்களையே கதையாக உருவாக்குகின்றனர். 


  கதை :

  ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் எமசிங்கபுரம் என்கிற ஊரில் எமனைத் தெய்வமாக வழிபடும் சிலர் இருக்கிறார்கள். அந்த ஊரின் எமகுல தலைவியாக விஜி சந்திரசேகர். அவரது மகன் இளவரசன் எமனாக விஜய் சேதுபதி. ரமேஷ் திலக், ராஜ்குமார் ஆகியோரும் எமனை வழிபடும் வம்சத்தைச் சேர்ந்தவர்கள். இந்த எமன் குலத்தைச் சேர்ந்தவர்கள் யாரையும் கடுமையாகத் துன்புறுத்த மாட்டார்கள்.. பெண்கள், குழந்தைகளை எதுவும் செய்யமாட்டார்கள்.. ஏமாற்றிப் பிழைக்க மாட்டார்கள்.. ஆனால், இவர்களது குலத்தொழில் திருட்டு. திருட்டையும் கூட கொள்கையும் நேர்மையுமாகக் கட்டிக்காத்து காலங்காலமாக நடத்தி வருபவர்கள் இவர்கள். இவர்களது கொள்கையே "உண்மையா உழைச்சு திருடணும்" என்பதுதான். ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் ஒரு சிலரை திருடுவதற்கு வெளியூருக்கு அனுப்பி அவர்கள் கொண்டு வரும் நகை பணத்தை தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டு யாருக்கும் தீங்கிழைக்காமல் வாழும் எமகுல ராபின்ஹூட்கள் இவர்கள்.

  விஜய் சேதுபதி, ரமேஷ் திலக், ராஜ்குமார் மூவரும் பல்வேறு கெட்டப்களில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் கொள்ளையடிக்கிறார்கள். அப்போது, தான் செய்துகொடுத்த சத்தியம் ஒன்றிற்காக நிஹாரிகாவை தனது ஊருக்குக் கடத்திச் செல்கிறதுவிஜய் சேதுபதி டீம். இதற்கிடையே, நிஹாரிகாவும், கௌதம் கார்த்திக்கும் நெருக்கமாகப் பழகுகிறார்கள். கடத்தப்பட்ட நிஹாரிகாவை தேடி கௌதம் கார்த்திக்கும் அவரது நண்பர் டேனியலும் எமசிங்கபுரத்துக்குச் செல்கிறார்கள். அங்கே பல வித்தியாசமான சிக்கல்களைச் சந்திக்கிறார்கள். அந்தப் புதிரான உலகத்துக்குள் இருந்து அவர்கள் தப்பித்தார்களா? நிஹாரிகாவை மீட்டுக்கொண்டு சென்றார்களா? நிஹாரிகா ஏன் கடத்தப்பட்டார் என்பதெல்லாம் மீதிக்கதை.


  **Note:Hey! Would you like to share the story of the movie ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் with us? Please send it to us (popcorn@oneindia.co.in).