X
ராட்சசி

ராட்சசி

Drama | 05 Jul 2019 | U | 134 Mins
Tamil

2.5 /5 Users

3 /5 Filmibeat

ராட்சசி கதை

ராட்சசி இயக்குனர் கவுதம்ராஜ் எஸ்.வொய் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ் நடிக்கும் அரசியல் கலந்த கல்வி திரைப்படம்.  பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தினை ட்ரீம் வாரீர் பிக்சார்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ்பாபு ஆகியோர் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையில், ஒளிப்பதிவாளர் கோகுல் பெனோய் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமின்ராஜ் பணிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது 2019 மே 31-ல் இணையத்தளத்தில் வெளியானது, மேலும் அன்றே இப்படத்தின் ட்ரைலரும் வெளியானது. கதை உருப்படாமல் இருக்கும் ஒரு அரசு பள்ளியை மாவட்டத்தின் சிறப்பான பள்ளியாக மாற்றும் ஒரு தலைமை ஆசிரியையின் கதை தான் ராட்சசி.  ஆர்.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தான் படத்தின் கதைக்களம். கவனிக்கப்படாத ஒரு அரசு பள்ளி எப்படி இருக்குமோ அதற்கு கொஞ்சமும் தப்பாமல் அப்படியே இருக்கிறது ஆர்.புதூர் பள்ளியும். மோசமான ஆசிரியர்கள், மோசமான கட்டமைப்பு, ஒழுக்கமில்லா மாணவர்கள், பொறுப்பில்லா பெற்றோர்கள் என அந்தப் பள்ளியே சீர்க்குலைந்து கிடக்கிறது.  இப்படிப்பட்ட அந்த பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வருகிறார் கீதா ராணி (ஜோதிகா). எடுத்ததுமே அதிரடி தான். மிரண்டு போகிறது பள்ளிக்கூடம். வேலை செய்யாத ஆசிரியர்களை வெளுத்து வாங்குகிறார். மாணவர்களை ஒழுங்காக்குகிறார். பெற்றோர்களை பொறுப்பாக்குகிறார். பள்ளியை மேம்படுத்துகிறார். கூடவே ஒன்பதாம் வகுப்பில் பெயிலான 82 மாணவர்களை பத்தாம் வகுப்புக்கு பாஸ் செய்கிறார். இதுபோல் நல்லது செய்தால் பகை வராமல் இருக்குமா?.  தனியார் பள்ளி நடத்தும் ராஜலிங்கம் (ஹரீஷ் பிதாரி) கீதா ராணியின் முயற்சிகளுக்கு தடைக்கற்களை உருவாக்குகிறார். சக ஆசிரியர்கள் 'ராட்சசி'யை வேலையைவிட்டு காலி செய்ய பார்க்கிறார்கள். இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பி வந்து, அந்த பள்ளியை கீதா ராணி எப்படி முதன்மை பள்ளியாக மாற்றுகிறார் என்பதே ராட்சசி சொல்லும் உணர்வுப்பூர்வமான மீதிக்கதை.  அப்படி இந்த ராட்சசி யார்? எதற்காக இந்த பள்ளிக்கு வந்தார்? என்பதற்கான விடையையும் தருகிறது பின் பாதிப்படம்.
Read More

ராட்சசி நடிகர்கள் & படக்குழுவினர்

ராட்சசி அணியின் தகவல்

இயக்குனர் கவுதம்ராஜ் எஸ்.வொய்
ஒளிப்பதிவாளர் கோகுல் பெனோய்
தொகுப்பாளர் பிலோமின் ராஜ்
இசை சீன் ரோல்டன்
தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, எஸ் ஆர் பிரகாஷ்பாபு
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

ராட்சசி விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
நடிப்பு ராட்சசி ஜோதிகாவுக்கு கீதா ராணி மகுடம் சூட்டி அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர் கவுதம்ராஜ். ஜோவிடம் இருந்து தனக்கு தேவையானதை மட்டும் கேட்டுவாங்கி படத்தில் வைத்திருக்கிறார். எனவே, இதில் நாம் வித்தியாசமான ஜோவை பார்க்க முடிகிறது. "டீச்சர்ஸ் கொஞ்சம் அதிகமா வேலை செஞ்சா போலீசுக்கு வேலை குறைஞ்சிடும்", "நீங்க எடுக்குற மார்க்கை வெச்சு இந்த உலகம் உங்களுக்கு மார்க் போட தயாராகிடுச்சு ", தீமை நடப்பதை வேடிக்கை பார்ப்பவர்களும் அதன் பகுதியாகிறார்கள். எதிர்த்து நிற்பவர்களே வரலாறாகிறார்கள்", உள்பட நிறைய சாட்டையடி வசனங்கள் படம் முழுவதும் நிரம்பிக்கிடக்கின்றன. கவுதம்ராஜும், பாரதிதம்பியும் இந்த சமூகத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை வசனங்களில் வெளிப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளின் இன்றைய நிலையை அப்படியே காட்டுகிறது படம். ஆனால் முதல் பாதி படம் முழுக்க அட்வைஸ் மழை பொழிந்திருக்கிறார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒரு ஸ்கூல் எச்எம் ஆர்டர் போடுவது போன்ற சினிமாத்தனமான காட்சிகள் படத்துடன் நம்மை ஒன்றவிடாமல் தடுக்கிறது. இரண்டாம் பாதியில், தனது உணர்வுப்பூர்வமான நடிப்பால் ரசிகர்கள் கட்டிப்போடுகிறார் ஜோதிகா. இருந்தாலும், இதே பின்னணியில் ஏற்கனவே வந்த படங்களை ராட்சசி ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கிறாள்.

ராட்சசி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

ராட்சசி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+