X
தமிழ் » திரைப்படங்கள் » சிவகுமாரின் சபதம்
சிவகுமாரின் சபதம்

சிவகுமாரின் சபதம்

Drama | 30 Sep 2021 | U | 139 Mins
Tamil

2.5 /5 Users

0 /5 Filmibeat

சிவகுமாரின் சபதம் கதை

சிவகுமாரின் சபதம் , தமிழ் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம். இப்படத்தினை ஹிப்ஹாப் தமிழா ஆதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ஹிப்ஹாப் தமிழா குழு இசையமைத்து, இயக்கி, தயாரித்துள்ளது.  பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜன் தனது 'சத்ய ஜோதி பிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஹிப்ஹாப் தமிழா குழு இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் தீபக் எஸ் துவாரக்நாத் எடிட்டிங் செய்துள்ளார். இப்படம் 2021 செப்டம்பர் 30ல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிவகுமாரின் சபதம் படத்தில் பணியாற்றியுள்ள படக்குழு மற்றும் திரை நட்சத்திரங்கள் சிவகுமாரின் சபதம் படத்தின் புகைப்படங்களுக்கு சிவகுமாரின் சபதம் படத்தின் டிரைலர், பாடல்கள் போன்ற அணைத்து வீடியோக்களின் தொகுப்பு சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் கதை தனது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் பரம்பரை தொழிலை தொடர்ந்து செய்து வரும் நெசவாளி வரதராஜன், தனத பேரன் சிவகுமார் (ஆதி) மீது அதிக பாசத்தோடு வாழ்கிறார். ஆதி தனது தாத்தா வரதராஜனின் செல்லப்பிள்ளை என்றாலும் நெசவு தொழிலில் ஈடுபாடு இல்லாமல் பட்டுப்புடவைகளை விற்பதில் ஈடுபாடு அளித்துவருகிறார். சிவகுமாரின் சித்தப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முருகன் (prankster ராகுல்), தனது வீட்டில் உள்ள அனைவரும் சிவகுமார் மீது பாசமாக இருப்பதால் சிறுவயதில் இருந்தே தன் வீட்டை வெறுக்கிறார். இதனால் தனது இளமை பருவத்தில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். விளையாட்டு பிள்ளையாக குடும்பத்தில் அனைவரின் செல்லப்பிள்ளையாக வளர்ந்துள்ள சிவகுமார், விளையாட்டு புத்தியில் பல தவறுகளை செய்து வருகிறார். இதனால் ஒரு பிரச்சனை ஏற்பட சிவகுமார், அவருடைய நண்பன் மற்றும் தாத்தா வரதராஜன் என அனைவரையும் போலீஸ் கைது செய்கிறது. இவர்களை இந்த சூழலில் இருந்து காப்பாற்ற மிக பெரிய தொழிலதிபர் சந்திரசேகரின் மருமகனான முருகன் (prankster ராகுல்) சிவகுமாரின் சித்தப்பா வருகிறார். தாத்தாவுடன் இருந்தால் சிவகுமார் விளையாட்டு தனமாக இருப்பான் என நினைத்து நாயகனை தன்னுடன் தன் மாமனார் வீட்டிற்க்கு அழைத்து சென்றுவிடுகிறார்.  அங்கு தனது பழைய காதலியை காணும் சிவகுமார், மீண்டும் தனது காதல் பயணத்தை தொடங்குகிறார். இவர்கள் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருவதை காணும், நாயகியின் முறைமாமன் சிவகுமாரை தாக்குகிறார். இதனை அறிந்த சிவகுமார் சித்தப்பா (prankster ராகுல்) நாயகியின் மாமனை பழிவாங்குகிறார். இதனால் prankster ராகுல் இல்லத்தில் பல பிரச்சனைகள் வருகிறது. அச்சமயம் தனது சித்தப்பாவிற்காக சிவகுமார் சபதம் போடுகிறார். அந்த சபதத்தினை சிவகுமார் நிறைவேற்றினாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை. சிவகுமாரின் சபதம் திரைப்படம் பற்றிய பிரத்யேக தகவல்கள் படக்குழு : சிவகுமாரின் சபதம் திரைப்படத்தில் நாயகியாக மாதுரி ஜெயின் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். இவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2021ஆம் ஆண்டு நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ' பூமிகா ' திரைபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ் சினிமாவில் இவரது இரண்டாவது திரைப்படம் ஆனாலும், நாயகியாக இவர் நடிக்கும் முதல் திரைப்படம் ஆகும். யூ டியூப் புகழ் வி.ஜே. பார்வதி மற்றும் பிராங்க் ஸ்டார் 'ராகுல்' இப்படத்தின் மூலம் தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளனர். தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடிக்கும் திரைப்படங்களின் மூலம் யூ டியூப் தமிழ் நட்சத்திரங்கள் அறிமுகமாகி வருகின்றனர். ரிலீஸ் : இப்படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டு தொடங்கி கொரோனா நோய் பரவல் காரணத்தால் பல தடைகளை சந்தித்து 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ல் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்திற்கு சென்று பிரபலமாகியுள்ளது.
Read More

சிவகுமாரின் சபதம் நடிகர்கள் & படக்குழுவினர்

சிவகுமாரின் சபதம் அணியின் தகவல்

இயக்குனர் ஹிப்ஹாப் தமிழா
கதை ஹிப்ஹாப் தமிழா
சங்கதி ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவாளர் அருண்ராஜா
தொகுப்பாளர் தீபக் எஸ் திவராக்நாத்
இசை ஹிப்ஹாப் தமிழா
தயாரிப்பாளர் தி ஜி தியாகராஜன், ஹிப்ஹாப் தமிழா
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

சிவகுமாரின் சபதம் ட்ரெய்லர்

Video Thumbnail

சிவகுமாரின் சபதம் பாடல்கள்

சிவகுமாரின் சபதம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

சிவகுமாரின் சபதம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+