X
தங்கலான்

தங்கலான்

Action | 15 Aug 2024 | U/A | 156 Mins
Tamil

2.5 /5 Users

2.5 /5 Filmibeat

தங்கலான் கதை

தங்கலான் - இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நாயகனாக நடித்திருக்கும் அதிரடி திரில்லர் திரைப்படம். இப்படத்தினை தமிழ் சினிமா முன்னணி தயாரிப்பாளரான கே ஈ ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இவருடன் இணைந்து இப்படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் தனது நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். அதிரடி - திரில்லர் படமாக உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே எடிட்டிங் செய்துள்ளார். சியான் விக்ரம் நாயகனாக நடிக்க இவருடன் இணைந்து மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஹரி கிருஷ்ணன் அன்பதுரை, முத்துக்குமார், டேனியல் என பல சினிமா முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தங்கலான் திரைப்படத்தின் படக்குழு & நட்சத்திரங்கள் தங்கலான் திரைப்படத்தின் டிரைலர் & பாடல் வீடியோக்கள் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ல் சுதந்திர தின ஸ்பெஷல் திரைப்படமாக திரையரங்கில் வெளியாகும் 'தங்கலான்' திரைப்படத்திற்கு தமிழக திரைப்பட தணிக்கை குழு ' யு/ஏ ' சான்றிதழ் அளித்துள்ளது. 100 - 150 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள 'தங்கலான்' திரைப்படத்தின் ஆன்லைன் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் ஓடிடி உரிமையை ' நெட்ப்ளிக்ஸ் ' நிறுவனம் 35 கோடிகளுக்கு கைப்பற்றியுள்ளது. தங்கலான் திரைப்படத்தின் பாடல்கள் தங்கலான் திரைப்படத்தின் கதை கர்நாடகாவில் 'கே ஜி எஃப்' என்று அழைக்கப்படும் 'கோலார் கோல்ட் மைன்' என்னும் இடம் உருவாக்கப்பட்ட கற்பனை கதைக்களம் தான், இப்படத்தின் கதை. இந்தியாவில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் போது, ​​ஒரு கடுமையான பழங்குடித் தலைவரான தங்கலான் (விக்ரம்) மற்றும் அவரது பழங்குடியினர், ஒரு பிரிட்டிஷ் ஜெனரல் லார்ட் கிளெமென்ட் உடன் இணைந்து தங்களுடைய கிராமத்தில் தங்கத்தைக் கண்டுபிடிக்கின்றனர். தங்கத்தைத் தேடும் போது, ​​கிராமவாசிகள் ஆரத்தி (மாளவிகா மோகனன்) என்ற வெளிப்படையான சூனியக்காரியின் கோபத்தைப் பெறுகிறார்கள், மேலும் தங்கலன் தனது முழு பலத்துடன் ஆரத்தியைத் தடுத்து தங்கத்தை கண்டுபிடித்தாரா?, இறுதியில் என்ன ஆனது என்பது இப்படத்தின் கதைக்கரு. கதை விக்ரம் - தங்கலான், காடையன் (தாதா), அரசன் (ஆரத்தி கணவர்), ஆதிமுனி, நாகமுனி என 5 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தின் கோலார் பகுதியில் தங்கத்தை தேடி பல அரசர்கள் மற்றும் அதிகாரம் படைத்த பலர் அலைந்துள்ளனர். இந்தியாவில் ஆட்சி அமைத்த பின் ஆங்கிலேயர் பலர் அந்த பகுதியில் தங்கத்தை கண்டுபிடிக்க முயற்சித்துள்ளனர். கோலார் அருகில் வட ஆற்காடு பகுதியில் வாழும் வேப்பூர் கிராமத்து மக்கள் தான் தங்கத்தை எடுக்க சரியான ஆட்கள் என்று கணித்த ஆங்கிலேய துரையான கிளெமண்ட் (டேனியல் கால்டாகிரோன்) தங்கலான் (சியான் விக்ரம்)-யை சந்தித்து தங்கத்தை எடுக்க முயற்சி செய்கிறார். கோலார் பகுதியை ஆளும் ஜமீன் (முத்துக்குமார்) அங்கு வாழும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் நிலங்களை அபகரிக்க முயற்சி செய்து வருகிறார். அந்த நிலம் தனக்கு சொந்தமானது என சொல்லி மக்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கி வருகிறார். ஊர் தலைவர் தங்கலான் (விக்ரம்) தனது மனைவி கங்கம்மா (பார்வதி) மற்றும் குழந்தைகள் என சொந்த ஊரில் விவசாயம் செய்து வருகிறார். வெள்ளைக்காரர் டேனியல் விக்ரம் மற்றும் ஊர் மக்களை சந்தித்து தங்கம் தேட உதவுங்கள் என சொல்ல, ஜமீன் போன்றவர்களிடம் இருந்து தப்பிக்க வெள்ளையருக்கு தங்கத்தை எடுத்துக் கொடுத்தால் வெள்ளைக்காரன் நம்மை மேன்மைப்படுத்துவான், நம் அடிமை விலங்கு அகன்று போகும் என தனது மக்களுடன் போராடும் தங்கலான் தங்கத்தை எடுக்க முயற்சி செய்கிறார். தங்கத்தை பற்றியும் அதை காக்கும் நாகர் இன தலைவி ஆரத்தி பற்றியும் தனது குழந்தைகளுக்கு விக்ரம் கதை சொல்லும் வழியாக தங்கலானின் பாட்டன் காடயன் ஆரத்தியை வீழ்த்தி சோழ மன்னனுக்கு எப்படி தங்கத்தை எடுத்துக் கொடுத்தான் என்கிற கதையை காட்டுகின்றனர்.  இறுதியில் தங்கலானுக்கு தங்கம் கிடைத்ததா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.
Read More

தங்கலான் நடிகர்கள் & படக்குழுவினர்

தங்கலான் அணியின் தகவல்

இயக்குனர் பா ரஞ்சித்
கதை பா ரஞ்சித், தமிழ் பிரபா
சங்கதி பா ரஞ்சித், தமிழ் பிரபா
ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்
தொகுப்பாளர் செல்வா
இசை ஜி வி பிரகாஷ் குமார்
தயாரிப்பாளர் கே இ ஞானவேல் ராஜா, பா ரஞ்சித்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தங்கலான் விமர்சகர்களின் விமர்சனம்

Tamil Filmibeat
ரஞ்சித்தின் அரசியல்.. விக்ரமின் நடிப்பு மிரட்டுது..
Cine Ulagam
மொத்தத்தில் தங்கலான் மக்களுக்கானவன்
Tamil Samayam
தங்கலான்- கொண்டாடலாம்
Cinema Vikatan
அரசியல் பேசும் மாய யதார்த்த சினிமா, மிரட்டுகிறது விக்ரம் - பா.இரஞ்சித் கூட்டணி
Hindu Tamil
பா.ரஞ்சித் & விக்ரமின் வரலாற்றுப் புனைவு - தாக்கம்

தங்கலான் ட்ரெய்லர்

Video Thumbnail

தங்கலான் பாடல்கள்

தங்கலான் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தங்கலான்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+