தொண்டன் இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி தானே இயக்கி நடித்திருக்கும் திரைப்படம். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். இவர்களுடன் விக்ராந்த், கஞ்சா கருப்பு, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் முழுக்க முழுக்க சமூக பிரச்சனையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். சமுத்திரக்கனி இப்படத்தில் இலவச ஆம்புலன்ஸ் சேவை செய்யும் நபராக வருகிறாராம். இவர் உடல்நிலை பாதிப்பால் சிகிச்சை தேவைப்படும் நபர்களை மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பதே இவரின் வேலையாக கொண்டு நடித்துள்ளார்.
கதை :
சமுத்திரக்கனி ராணுவத்திலிருந்து விலகி தன் சொந்த ஊருக்கு வந்து ஆம்புலன்ஸ் ஓட்டுனராக இருக்கிறர். எல்லோரிடமும் அன்பாகவும், எல்லாருக்கும் வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்.
தன் தங்கையை கிண்டல் செய்து தொந்தரவு செய்யும் விக்ராந்தை திருத்தி, அவருக்கு தான் வேலை செய்யும் மருத்துவமணையில் அட்டெண்டர் வேலையை வாங்கி தருகிறார். இதற்கிடையில் விஷ்னு (சமுத்திரக்கனி)-க்கு மந்திரி மற்றும் அவரின் குடும்பம் மூலம் பல்வேறு சோதனைகளும் இடையூறுகளும் வருகின்றது.
சண்டை இல்லாமல் அகிம்சை வழியில் இருக்கும் விஷ்ணுவை சண்டைக்கு தூண்டுகின்றது அக்கும்பல். மந்திரி மற்றும் அவரின் குடும்பத்தால் விஷ்ணுவிற்கு அப்படி என்ன இடையூரு வந்தது..? அவர்களின் சாதி திட்டங்களை விஷ்ணு எவ்வாறு தன்னுடைய அகிம்சை வழியில் முறியடித்தார் என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.