X
தமிழ் » திரைப்படங்கள் » உத்தரவு மகாராஜா
உத்தரவு மகாராஜா

உத்தரவு மகாராஜா

Action | 16 Nov 2018 |
Tamil

2.6 /5 Users

2 /5 Filmibeat

உத்தரவு மகாராஜா கதை

உத்தரவு மகாராஜா இயக்குனர் ஆசிப் குரேஷி இயக்கத்தில், உதயா, பிரபு, நாசர், கோவை சரளா, மனோபாலா, எம் எஸ் பாஸ்கர், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்த அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் நரேன் பாலகுமார் இசையமைத்துள்ளார். கதை :  இஸ்திரி தொழிலாளியான எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ரவி (உதயா). இஸ்திரிக்கு வந்த ஒரு கோட் சூட்டை அணிய வேண்டும் என மகன் (சிறு வயதில்) ஆசைப்பட, அதை நிறைவேற்றுகிறார் தந்தை. அப்போது எதிர்பாராதவிதமாக கோட்டின் உரிமையாளர் இதனை பார்த்துவிட, குடும்பமே அவமானப்படுகிறது.  இதனால் டி.ஐ.டி எனப்படும் மனநோய்க்கு ஆளாகிறார் உதயா. வளர்ந்து வாலிபனான பிறகும் அவருக்கு அந்த பாதிப்பு தொடர்கிறது. யாரோ ஒரு ராஜாவின் குரல் உதயாவை தொந்தரவு செய்கிறது. இதனால் மரணம் ஏற்படும் அளவுக்கு பாதிக்கப்படுகிறார். யார் இந்த ராஜா? உதயாவுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம் என்பதே கதை.
Read More

உத்தரவு மகாராஜா நடிகர்கள் & படக்குழுவினர்

உத்தரவு மகாராஜா அணியின் தகவல்

இயக்குனர் ஆசிப் குரேஷி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் NA
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

உத்தரவு மகாராஜா விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
முதல் படத்தை திரில்லர் கதையாக எடுத்திருக்கிறார் இயக்குனர் ஆசிப் குரைஷி. நல்ல கதை கரு தான். ஆனால் திரைக்கதையில் தெளிவு இல்லாததால் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது. அதேபோல பாத்திரப்படைப்புகளிலும் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. மற்றபடி முதல் படத்திலே இந்த அளவுக்கு டெக்னாலஜி விஷயங்களை ஆராய்ந்து முயற்சித்திருப்பதற்காக இயக்குனருக்கு பாராட்டுகள். பல ஆண்டுகளாக வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் நடிகர் உதயாவிற்கு இந்த படம் வெற்றியை தருமா என்பது சந்தேகமே. மனநலம் பாதிக்கப்பட்ட மனிதனாக நிறைய மெனக்கெடல்களுடன், வித்தியாசமாக நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் அது பல இடங்களில் ஓவர் ஆட்டிங் ஆகிவிடுகிறது. ஸ்ரீமனின் சீரியஸ் நடிப்பு படத்தில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. அதேசமயம் கோவை சரளாவுடன் சேர்ந்து அவர் செய்யு காமெடி, கடுப்பேத்துறாங்க மை லார்டு மொமன்ட். இவர்களை தவிர, நாசர், எம்.எஸ்.பாஸ்கர், குட்டி பத்மினி, மனோபாலா, தனஞ்ஜெயன், ஆடம்ஸ் என நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பாலாஜி ரங்காவின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் காட்சிகளும், சேசிங் காட்சிகளும் சிறப்பு. எடிட்டர் சத்ய நாராயணா இன்னும் கொஞ்சம் கத்தரித்திருந்தால் படத்தில் சுவாரஸ்யம் அதிகரித்திருக்கும். மொத்தத்தில் இந்த மகாராஜாவுக்கு ரசிகனின் உத்தரவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

உத்தரவு மகாராஜா திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Asal is the fantastic movie. From director saran and fight scenes are good. Ajith style and others costumes are also good

  • In true Ajith style, no one is talking about this movie called Aasal. Just snippets of eagerly-lapped up info on how the script is an action-thriller never done before, how the locations all over the world are breathtaking, how there are two lovely..

×
2.6 /5 Your Rating

உத்தரவு மகாராஜா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+